தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு பயணம் செல்ல உள்ளதாக வெளியாகியுள்ளன. சிகிச்சைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்ல இருப்பதாகவும்,

சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்கு செல்லக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதா,

சுமார் ஒன்றை மாதங்களுக்கு பிறகு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா,

வெளியே எங்கும் செல்லாமல் தனது போயஸ் கார்டன் இல்லத்திலேயே இருந்தார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததால்,

சுமார் 7 மாதங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் 19 ஆம் தேதியன்று, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வெளியே வந்தார்.

இதையடுத்து, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழா சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது பலரையும் யோசிக்க வைத்தது.

அத்துடன் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு அவர் இடைத்தேர்தலில் போட்டியிட சென்னை ஆர்.கே. நகர் தொகுதியை தேர்ந்தெடுத்ததும் கூட, பிரசாரத்திற்கு சென்னையை தாண்டி வேறு ஊருக்கு செல்ல முடியாது என்பதால்தான் என்று கூறப்பட்டது.

மேலும், மெட்ரோ ரயில் சேவையை கூட தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே ஜெயலலிதா தொடங்கி வைத்தார். சமீபத்தில், அதிமுக சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப் பட்டது.

கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உரையை ஓ.பன்னீர்செல்வம்தான் வாசித்தார்.

அதில், கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில், வழக்கம்போல் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்.

எனினும் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக, இந்த விழாவுக்கு என்னால் நேரில் வர இயலவில்லை.

என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாவிடினும், என் எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன’ என குறிப்பிட்டி ருந்தார் ஜெயலலிதா.

அதாவது, அவராலேயே மறைக்க முடியாத நிலைக்கு உடல்நிலை பாடாய்ப் படுத்த ஆரம்பித்து விட்டது என்பதே உள்விவகாரங் களை அறிந்தவர்கள் சொல்கின்றனர்.

ஜெயலலிதாவால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை என்றும்,

இதனால் தான் அவரது பதவியேற்பு விழாவில் சில நிமிடங்க ளுக்குள் அனைவரையும் கோரஸாகப் பதவிப் பிரமாணம் எடுக்க வைக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அப்போது சொல்லப் பட்டது.

'கால்களின் இரண்டு மூட்டுகளும் தீராத வலியால் அவரை வேதனைப் படுத்துகின்றன. அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ முறைகளின் படியும் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.

அதற்கான சில பயிற்சி களையும் செய்கிறார். ஆனாலும் வலி குறைய வில்லை. நாளுக்குநாள் கூடிக் கொண்டு தான் போகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது என்பது மருத்துவர்கள் அறிவுரை. அப்படி உட்கொண்டால்,

உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வலி நிவாரணி மாத்திரைகள்உட்கொள்ளாமல் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது.
அதனால்தான் அவர் நடக்க, நிற்க சிரமப்படுவ தாக தகவல்கள்  தெரிவிக் கின்றன. இந்நிலையில் தான் ஜெயலலிதா வுக்கு சமீப நாட்களாக இந்த மூட்டு வலி மிக அதிகமா னதாக கூறப்ப டுகிறது.

இதன் காரணமாகவே அவர் தனது கொடநாடு செல்லும் திட்டத்தை கைவிட்ட தாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதுகுறித்த செய்திகள் தமிழக அரசியல் வட்டாரங் களில் மிக அதிக அளவில் விவாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து தான், அண்மையில் கூட திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பேசினார்.

அப்போது, "தயவு செய்து நீங்கள் (ஜெயலலிதா) ஓய்வெடுத்து உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். முதலமைச்சர் என்பவர், ஒரு நாட்டுக்கு ரகசியமா னவராக இருக்கக் கூடாது.
பகிரங்கமாக, வெளிப்படையாக இருக்க வேண்டும்" என்று கருணாநிதி பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்ல இருப்ப தாகவும், அநேகமாக சிங்கப்பூர் அல்லது அமெரிக்க வுக்கு அவர் செல்லக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி யுள்ளது.

இது தொடர்பாக ஜெயலலிதா தனது மருத்துவர் களுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறப் படுகிறது. இருப்பினும் பயண தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.

இது குறித்து அதிமுக வட்டாரங்களில் தொடர்பு கொண்டு நாம் விசாரித்த போது, " எங்கள் காதுக்கு இப்படி ஒரு தகவல் வந்தது உண்மை தான்.

ஆனால் எங்களாலும் இது குறித்து உறுதியாக எதுவும் சொல்ல இயலாது" என்றே கூறுகின்றனர். இருப்பினும் இன்னும் சில தினங்களில் இது தொடர்பாக அதிகாரப் பூர்வ தகவல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.