அஜித்தின் புதிய படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீட்டு தேதிகள் !

அஜித்-சிவா கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகி  ப்புதிய படத்திற்கு இன்னும் பெயரிடபடவில்லை
இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக படபிடிப்பு குழுவினர் அனைவரும் துபாய் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டன.

கடந்த வாரம் துபாய் சென்று லொகேஷன் பார்த்துவிட்டு வந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், துபாயில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் அடுத்த மாதம் துபாய் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

தீபாவளி தினத்தின் ரிலீஸ் செய்ய வேண்டியதுள்ளதால் படப்பிடிப்பை தாமதிக்க விரும்பாத சிறுத்தை சிவா, உடனே துபாய் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

லட்சுமி மேனனுடன் முதல்கட்ட படபிடிப்பும், கபீர்சிங் உடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட அஜீத், இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் சுருதிஹாசனுடன் டூயட் பாட ரெடியாகி வந்தார்.

துபாயில் வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்து வந்தாலும், தற்போது ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் துபாயில் அனுமதி கிடைக்கவில்லையாம். எனவேதான் இப்படக்குழு தற்போது இத்தாலிக்குச் சென்றுள்ளனர்.

இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் நேற்று முதல் இப்படக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் அஜித், சுருதியின் டூயட் முடிந்த உடன் ஜூலை 15ம் தேதிக்குள் இந்தியா திரும்பவுள்ளனர்.

அஜீத், சுருதிஹாசன், சூரி, லட்சுமி மேனன், கபீர்சிங் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இதன் நான்காவது கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

அஜித்-சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி  வரும் படத்திற்கு  இன்னும் பெயரிடப்பாடத நிலையில், டீசர், டிரைலர், இசை வெளியீட்டு தேதிகள் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் அக்டோபர் 1ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை அதே மாதத்தின் இறுதியில் வரும் என கூறப்பட்டுள்ளது. படம் தீபாவளி சரவெடியாக வெளிவரவிருக்கின்றது.
Tags:
Privacy and cookie settings