போதையில் கார் ஓட்டி, ஒருவர் உயிரிழக்க காரணமான வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், மும்பை உயர் நீதிமன்ற த்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இவ்வழக்கில் தொடர்புடைய சில ஆவணங்களை வட்டார மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்படி சல்மான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சல்மானின் வழக்கறிஞர் அமித் தேசாய் இம்மனுவை தாக்கல் செய்தார். மேலும், வழக்கில் தொடர்புடைய சில விடுபட்ட ஆவணங்களின் பட்டியலையும் அவர் அளித்தார்.
மேல்முறையீட்டுக்கு அவை அவசியம் என கருதப்பட்டால், உரிய அதிகாரிகளுக்கு விடுபட்ட ஆவணங்களை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஆர். ஜோஷி, “சல்மான் தரப்பு பட்டியலை பார்வையிட்டு அவற்றில் சில ஆவணங்கள் விடுபட்டிருந்தால், அவற்றை வரும் 20-ம் தேதிக்கு முன்பாக கேட்க வேண்டும்” என அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
சல்மான் தரப்பில் வரும் 27-ம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைக்கும்படி அவகாசம் கோரப்பட்டது. ஆனால், நீதிபதி வரும் 20-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.