13 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்தவர் இப்னு கல்துன். பிரபல முஸ்லிம் அறிஞரான இவர் கிபி 1377 ஆம் ஆண்டில் இப்னு கல்துனின் முன்னுரை என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினார்.
சுமார் ஏழு நுற்றாண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் அறிஞர் இப்னு கால்துனால் எழுதபட்ட புத்தகம் தான் தற்போது பேஸ்புக் நிறுவனர் மார்க் அவர்களை கவர்ந்திருக்கிறது.
சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து படித்து வரும் பேஸ்புக் நிறுவனர் மார்க் இந்த முறை தேர்வு செய்திருக்கும் புத்தகம் தான் இப்னுகல்துன் அவர்களின் முன்னுரை.
அந்த புத்தகத்தை பற்றி மார்க் குறிப்பிடும் போது, அது சிறந்த ஒரு அறிஞரால் எழுதபட்ட சிறப்பான புத்தகமாகும்.
ஏழு நுற்றாண்டுகளுக்கு முன்பே சமூக வியல் கலை கலாட்சாரம் நகர வளர்ச்சி அரசியல் வணிகம் விஞ்ஞானம் இவைகளை பற்றி பேசிய புத்தகமாகும்.
ஆய்வுகள் அரும்பாத கால கட்டத்திலேயே ஆய்வுகள் பற்றி பேசிய புத்தகம் அது. பிற்காலத்தில் நடத்த பட்ட ஆய்வுகளுக்கு அடிப்படைகளை வழங்கிய புத்தகம் அது என்று மார்க் புகழ்கிறார்.
700 ஆண்டுகளுக்கு முன்பு எழுதபட்ட ஒரு புத்தகம் இன்றை பேஸ்புக் நிறுவனரை கவர்ந்திருக்கிறது என்றால் அந்த புத்தகத்தின் தரத்தையும் அதை எழுதியவரின் அறிவாற்றலையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

