மதத்துக்கு எதிரான குற்றச்சாட்டு கிறிஸ்தவ பெண்ணை தூக்கில் போட தடை !

பாகிஸ்தானில் மதத்துக்கு எதிரான குற்றச்சாட்டு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணை தூக்கில் போட, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தடை விதித்து உத்தரவிட்டது.
மதத்துக்கு எதிரான குற்றச்சாட்டு கிறிஸ்தவ பெண்ணை தூக்கில் போட தடை !
குற்றச்சாட்டு 

பாகிஸ்தானில் மதத்துக்கு எதிரான குற்றச்சாட்டு மிகக்கடுமையான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகிறவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தை திருத்த வேண்டும் என்று பஞ்சாப் மாகாணத்தின் கவர்னராக இருந்த சல்மான் தசீர், 

சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஷபாஸ் பட்டி ஆகியோர் கூறியதற்காக அவர்களை 2011–ம் ஆண்டு படுகொலை செய்து விட்டனர்.

பெண்ணுக்கு மரண தண்டனை 

இந்த நிலையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், ஷேய்க்குப்புரா மாவட்டத்தை சேர்ந்த ஆசியா பீபி (வயது 44) என்ற கிறிஸ்தவ பெண்,

2009–ம் ஆண்டு, ஜூன் மாதம் சக பெண்களிடம் முஸ்லிம் மதத்துக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய விசாரணை நீதிமன்றம், மரண தண்டனை விதித்து கடந்த 2010–ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.

பாகிஸ்தானில் இந்த குற்றச்சாட்டின் பேரில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் பெண் இவர். இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, உலகளவில் கடும் விமர்சனங்களுக்கு வழி வகுத்தது.

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் 

இருப்பினும் அவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை லாகூர் ஐகோர்ட்டு உறுதி செய்தது.

இந்த நிலையில் அவர் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். 

அந்த மனுவில் அவர், தனிப்பட்ட விரோதம் காரணமாக என் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தி விட்டனர். எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

தடை 
இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசியா பீபியின் சார்பில் 

ஆஜரான வக்கீல் சயீப் உல் மலூக், என் கட்சிக்காரர் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது, அவர் அப்பாவி, அவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.

இதையடுத்து ஆசியா பீபியை தூக்கில் போட அதிரடி தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. 

மேலும், இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு அது உத்தர விட்டது.
Tags:
Privacy and cookie settings