கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையிலான அரசு அரங்கேற்றிய இனப்படுகொலையில் சுமார் 2500க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பல லட்சம் பேர் வீடுகளை,சொத்துக்களை இழந்து அகதிகளாயினர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் தலைவர் எஹ்சான் ஜாஃப்ரி துண்டுத் துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலேயே எரிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பெண் சிசுக்களை அழிக்கப்படுவதை தடுக்கவும், பெண் குழந்தைகளின் அவசியத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு தந்தையும், தனது மகளுடன் செல்பி எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
மோடியின் இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எஹ்சான் ஜாஃப்ரியின் மகள் நிஷ்ரின் ஜாஃப்ரி ஹுசைன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது தந்தையுடன் மகிழ்ச்சியுடன் இருந்த தருணத்தை படமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த படம் ஃபேஸ்புக்கில் தீயாய் பரவி பலரது ஆதரவையும் பெற்றுள்ளதோடு, இனப்படுகொலையில் தந்தையை இழந்த மகளின் துயரத்தை வெளிப்படுத்துவதாகவும் அந்த புகைப்படம் அமைந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
