முதுகுவலி நீங்க உட்கடாசனம் பயிற்சி | Utkatasanam !

காய்ச்சலுக்கு நிகராக தற்போது பெரும்பாலான மக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க காரணம் முதுகுவலி தான் என்றும் சொல்லலாம். ஆபத்தான நோயல்ல ஆனால் வலி அவஸ்தையை உண்டாக்கும் நோய்.
உட்கடாசனம் பயிற்சி | Utkatasanam !
நமது உடலில் முதுகில் இருக்கும் எலும்பில் மொத்தம் 33 விதமான எலும்புகள் உண்டு. இவை தான் நம்மை உட்காரவும், ஓடவும், நடக்கவும், படுக்கவும் வைகிறது.

முதுகு பகுதியின் மேல் முதுகு வலி, கீழ் முதுகு வலி என்று ஒவ்வொரு இடங்களிலும் குறிப்பிட்டு வருவதும் உண்டு. பொதுவான வலியும் உண்டு. காய்ச்சலுக்கு ஓய்வெடுத்தால் சரியாகும் என்று சொல்வார்கள். 

ஆனால் இந்த முதுகுவலி வரும் போது சும்மாவே உட்கார்ந்திருந்தாலும், வேலை செய்து கொண்டே இருந்தாலும் கூட வலியின் தீவிரம் இருந்து கொண்டே இருக்கும். முதுகுவலி நீங்க உட்கடாசனம் பயிற்சி செய்வது அவசியம்.
செய்முறை:

1. இரண்டு கால்களையும் சேர்த்துவைத்து உள்ளங்கைகளை சாமி கும்பிடுவது போல் மார்புக்கு நேரே வைத்து நிற்கவும்.

2. மூச்சை இழுத்துக் கொண்டே கூப்பிய கைகளை தலைக்கு மேலே நேராக உயர்த்தவும்.

3. மூச்சை வெளிவிட்டுக் கொண்டே அதே நிலையில் முழங்கால்களை மடக்கி புட்டங்கள் தரையில் படும்படி உடலைக் கொண்டு வரவும்.

4. இதே நிலையில் சிறிதுநேரம் இருந்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.

பலன்கள்:

1. கால், பின்பக்கத் தசைகள் வலுவடைகின்றன.

2. முதுகுவலி நீங்குகிறது.

3. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
Tags: