உலகின் காஸ்ட்லி லம்போகினி கார்!





உலகின் காஸ்ட்லி லம்போகினி கார்!

Anonymous
By -
தங்கத்தினால் செய்யப்பட்ட லம்போகினி ஸ்கேல் மாடல் கார் ஒன்றை, ஜெர்மனியை சேர்ந்த பிரபல வடி வமைப்பு நிபுணர் ராபர்ட் வில்ஹெம் குல்பெனும்,


அவரது நிறுவனமும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். 500 கிலோ தங்க கட்டியில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் காஸ்ட்லியான கார் இது. 

கடந்த 12 ஆண்டுகளாக விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் கற்களிலிருந்து சொகுசு கார் மாடல்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டு வருகிறது.

லம்போர்கினி அவென்ட்டர் LP 700-4 காரின் மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்கக் கார் 4 கின்னஸ் சாதனைகளை படைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

500 கிலோ தங்கக்கட்டியை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி காரை உருவாக்கியுள்ளனர். கடைசியாக வடிவம் பெற்ற காரில் இருந்த தங்கத்தின் எடை 25 கிலோ மட்டுமே...


கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே 500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை 7.3 மில்லியன் டாலர் விலைக்கு விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதில், 6.50 லட்சம் டாலரை ஒரு அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் இருக்கைகளின் துணியில் மிகவும் விலையுயர்ந்த 700 கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

உலகின் மிகவும் விலையுயர்ந்த கார் மாடல், குண்டுதுளைக்காத கண்ணாடியிலான காட்சிப் பெட்டி, 500 கிலோ தங்கக்கட்டியிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரே கார், உலகின் சொகுசான கார் என 4 கின்னஸ் சாதனைகளை படைக்கும் விதத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
Tags: