உயர் ரத்த கொதிப்புக்கு நிரந்தரத் தீர்வு !

உலகில் பல கோடி மக்கள் அவதியுறும் ஒரு பாரிய நோயாக உயர் ரத்தக் கொதிப்பு உள்ளது. பொதுவாக பரம்பரை வருத்த மாகவும், சர்க்கரை வியாதி யுள்ளவர் களையும் இது தாக்குகிறது.
உயர் ரத்த கொதிப்புக்கு நிரந்தரத் தீர்வு !
உடலில் ரத்தம் பயணிக்கும் நாடி நரம்புகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. அதனால் இதயம் கடுமையாகத் துடிக்கும் போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும், அப்போது நாடி நரம்புகள் விரிவடையும். 

இத் திறன் நாளடைவில் பாதித்து, அவை சுருங்கி விரியும் தன்மை பாதிப்பதால், உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுகிறது.  இதனை மாத்திரை கொண்டே கட்டுப்படுத்தி வந்தனர் மருத்துவர்கள். 

பொதுவாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் களுக்கு கோபம் அதிகமாக வரும், மாரடைப்பு ஏற்படும், சிறுநீரகம் பதிக்கப்படும், மற்றும் மூளை நரம்புகள் வெடிக்கும் அபாயமும் உண்டு.

ஆனால் இதனைத் தற்போது மிக எளிதாக மாற்ற முடியும் என மருத்து வர்கள் கூறுகி றார்கள். அதில் 99% வெற்றியும் பெற்றுள்ளனர்.
மனித உடலில் உள்ள சிறுநீரக த்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு நாளத்தில் உருவாகும் சமிக்ஞைகள் மூளைக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. அதன் மூலமே மூளை நாடி நரம்பை விரிவாக்கவும் சுருங்கவும் செய்கிறது.

கால்கள் (தொடை) வழியாக நீளமான ஊசி ஒன்றைச் செலுத்தி அதை சிறுநீரகம் வரை கொண்டு சென்று, 

குறிப்பிட்ட அந்த நரம்புக்கு சில வகையான மின் சாரத்தைப் பாய்ச்சி அவற்றைத் தூண்டு வதன் மூலம் அந்நரம்புகள் பழைய நிலைக்கு கொண்டுவரப் படுகின்றன.

அதனால் அவை சமிக்ஞை களை சரியாக மூளைக்கு அனுப்பும். எனவே ரத்த அழுத்தம் சரியான முறையில் பேணப் படுவதாக, தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்ட நபர் தெரிவித் துள்ளார்.
இவர் தனது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்த தினம் தோறும் 12 மாத்திரைகளை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இப்போது மாத்திரைகள் ஏதும் பாவிக்காமல் அவர் இருப்பதாக அவரே தெரிவித் துள்ளார்.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !