பேஸ்புக்கில் தனது போட்டோவிற்கு ஆபாச கமெண்ட் அடித்த நபருக்கு பதிலடி கொடுத்த விஷாகா சிங் !

கண்ணா லட்டு திண்ண ஆசையா மற்றும் ஒரு ஊர்ல இரண்டு ராஜா ஆகிய படங்களில் நடித்தவர் விகாஷா சிங் . இவருக்கு என பேஸ்புக்கில் ஒரு பக்கம் இருக்கிறது .

 

அதன் மூலம் தனது ரசிகர்களுடன் போட்டோக்களை பகிர்ந்து கொள்வார் . அவர் சமீபத்தில் ஒரு டீ ஷர்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த போட்டோவை அப்லோட் செய்து இருந்தார் .

அந்த டீஷர்டில் "Everybody is Somebody's foreigner," என எழுதப்பட்டு இருந்தது . அதற்கு விகாஷ் சிங் என்பவர் " டீ ஷர்டில் வார்த்தைகள் தவறான இடத்தில் மிஸ் ஆகி இருக்கின்றன " என கமெண்ட் அடித்தார் .

அதற்கு விஷாகா சிங் , " சரி விகாஷ் சிங் , டீ ஷர்டில் வார்த்தைகள் வேறு எங்கு இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கீறீர்கள் ? . இது போன்று சிறுபிள்ளை தனமாக கமெண்ட் அடிக்காதீர்கள் .

எனது மார்பகத்தில் அது இருப்பதை பார்த்து சிறுபிள்ளைப் போன்று நீங்கள் சந்தோஷமடைந்தால் கடவுள் தான் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் " என்று அடித்தார் . இன்னொருத்தர் , " "Nice looking & nice boobs" என்று கமெண்ட் அடித்து இருந்தார் .

இதற்கு பதிலளிக்கும் விதமாக விஷாகா

1) உங்கள் டிபியில் இருக்கும் அப்பாவி குழந்தையை நீக்கி விடுங்கள் .

2) உங்களின் சொந்த போட்டோவை வைக்கும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பின் கமெண்ட் அடியுங்கள்.

3) மார்பகம் நன்றாக இருக்கிறது . எனக்கு நான் ஒரு பெண் என்று தெரியும் . எல்லா பெண்களுக்கும் மார்பகம் இருக்கிறது . உன் அம்மா , சகோதரி , மனைவி , பாட்டி , அத்தை , நண்பர்கள் என அனைவருக்கும் உண்டு .

அவர்களிடமும் இப்படி தான் செய்வாயா ?? உனக்கு தைரியம் இருந்தால் அதை நேரில் என்னிடம் சொல் , இல்லையென்றால் பக்கத்தைவிட்டு விலகு " என கோவமாக எழுதி இருந்தார் .
Tags: