அதிகம் சம்பாதிக்கும் நட்சத்திரங்களில் ரஜினி மற்றும் விஜயை முந்திய அஜித் !!

போபர்ஸ் இந்தியா நாளிதழ் இந்தியாவில் இருக்கும் 100 நட்சத்திரங்களின் பட்டியலை பணம்,புகழ் மற்றும் ஊக்கம் அளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து வெளியிட்டது.

 

இந்த பட்டியலில் ரஜினிகாந்த் பணக்காரர்களின் பட்டியலில் 21வது இடத்தைப் பெற்றார். விஜய்க்கு 23 வது இடம் கிடைத்தது. அஜித் 19 வது இடத்தைப் பிடித்து தமிழகத்தில் முதல் இடத்தைப் பிடித்தார்.

பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் சல்மான் கானும் இரண்டாவது இடத்தில் அமிதாபும் மூன்றாவது இடத்தில் ஷாருக் கானும் உள்ளன்ர். அதிக அளவு தாக்கம் ஏற்படுத்தும் நடிகர்களின் பட்டியலில் விஜய் 80 வது இடம் பிடித்தார்.

ஆனால் ரஜினி மற்றும் அஜித் முறையே 89 மற்றும் 98 வது இடங்களையே பிடித்துள்ளனர். இதன் மூலம் அஜித் மற்றும் ரஜினியை இந்த பட்டியலில் முந்தினார் விஜய்.
Tags:
Privacy and cookie settings