வெளிச்சத்திற்கு மயங்கும் பறக்கும் மீன்கள் !

உலகின் பல்வேறு கடல் பகுதிகளில், கடல் மட்டத்தை காட்டிலும், பல அடி உயரத்திற்கு துள்ளிக் குதிக்கும் பறக்கும் மீன்கள் உள்ளன.
கடலின் ஆழத்தில் வேகமாக செல்லும் வகையில், அவற்றின் உடல் அமைப்பு உள்ளது.

ஆழத்தில் அதிக வேகம் எடுக்கும் இந்த மீன்கள், கடல் நீரை துளைத்துக் கொண்டு, ஏவப்பட்ட ஒரு ராக்கெட் போல கடல் மட்டத்திற்கு மேலே சீறிக் கிளம்புகின்றன.
டெங்கு, சிக்குன் குனியா பயப்பட வேண்டாம்?
பார்ப்பதற்கு இவை பறப்பது போல தோன்றும். ஆழ்கடலில் உள்ள மேக்ரல், டுனா, ஸ்வார்டுபிஷ், மர்லின் உள்ளிட்ட சில பெரிய வகை மீன்கள், தங்களின் ராட்சத பசிக்கு, சிறிய மீன்களை உண்டு தீர்க்கின்றன.

இந்நிலையில், தங்களை உணவாக கொள்ள வரும் இந்த எதிரி மீன்களிடம் இருந்து தப்பவே, குறிப்பிட்ட சில மீன் வகைகள் கடலுக்கு மேலே மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று தப்புகின்றன.

பறக்கும் மீன்களின் விருப்பமான உணவு, கடல் மட்டத்தில் மிதக்கும் ஒரு வகை நுண்ணியிர்கள் தான்.

இவற்றை கண்டறிந்து உண்பதற் காகவும் பறக்கும் மீன் கள் கடல் மட்டத்திற்கு மேலே பாய்கின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில், 40 க்கும் மேற்பட்ட பறக்கும் மீன் வகைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கை போன்ற உறுப்புக்கள் இயற்கை யாகவே அமைந்துள்ளன.

பொதுவாக, மற்ற மீன்களில் காணப்படும் துடுப்புக்களே இறக்கைகளாக பரிணாமம் பெற்றிருக்க லாம் என்று ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர்.

பறக்கும் மீன்களில் சில நான்கு இறக்கைகளை பெற்றவை களாக காணப் படுகின்றன.

இந்த மீன்கள், மற்ற மீன்களை காட்டிலும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்திற்கு, அதிக தூரத்திற்கு பறக்கும் திறன் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கது.
ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம் !
கடலுக்கு அடியில் இருந்து, நீரை துளைத்து, வேகமாக கிளம்பும் இந்த மீன்கள், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் மேல் எழும்புகின்றன. பின், சில நிமிடங்களுக்கு அதே வேகத்தில் காற்றில் பறக்கிள்றன.

காற்றில் பறக்கும் போது, பின்புற வாலை, சுக்கானாக பயன்படுத்தி, செல்ல வேண்டிய திசைக்கு, தங்களின் போக்கை மாற்றிக் கொள்கின்றன.

சில மீன்கள் கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயரத்திற்கு எழும்பி, 600 அடி தூரம் வரை காற்றிலேயே பறக்கும் சக்தி கொண்டவை.

நீர்பரப்பில் இறங்கும் வேளையில், குறிப்பிட்ட வேகத்தில் நீருக்குள் பாய்ந்து, மீண்டும் மேலே எழும் வழக்கம் சில பறக்கும் மீன்களிடம் காணப்படுகிறது.
பறக்கும் மீன்கள், மற்ற சில நீர் வாழ் இனங்களைப் போலவே வெளிச்சத்தால் ஈர்க்கப்படும் குணத்தை கொண்டவை.

இது, மீனவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. பறக்கும் மீன் வேட்டைக்கு இரவு நேரத்தில் செல்லும் மீனவர்கள், அதிக ஒளி உமிழும் விளக்குகளை கடல் பரப்பில் பயன்படுத்துகின்றனர்.
இந்த வெளிச்சத்தால் கவரப்படும் பறக்கும் மீன்கள், ஒட்டு மொத்தமாக ஒரே இடத்திற்கு வந்து குவிகின்றன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஏராளமான பறக்கும் மீன்களை பிடித்து விடுகின்றனர்.
Tags: