முதலாமாண்டு மாணவியை பலமுறை சட்டக் கல்லூரி மாணவர்கள்!

ஹரியானாவில் சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 3 பேர் முதலாமாண்டு மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இளம்பெண் ஒருவர் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு சட்டம் படிக்க சேர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கும் அதே பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் சீனியரான ஹர்திக் சிக்ரி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஹர்திக் தனது காதலிக்கு தன்னுடன் படிக்கும் கரண் சப்ரா மற்றும் விகாஷ் கார்க் ஆகிய இறுதியாண்டு சட்ட மாணவர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஹர்திக் அந்த பெண்ணை இரவு 10 மணிக்கு மேல் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து அவரது நண்பர்கள் கரண் மற்றும் விகாஷ் ஆகியோர் அந்த பெண்ணை இரவு 10 மணிக்கு மேல் பல்கலைக்கழக வளாகத்தில் பலாத்காரம் செய்துள்ளார். மூன்று பேரும் அந்த பெண்ணை பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு இடங்களில் வைத்து சீரழித்துள்ளனர்.

அந்த 3 பேரில் ஒருவர் பலாத்காரம் செய்ததை புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் புகைப்படத்தை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையும் தாண்டி அந்த பெண் போலீசில் கடந்த சனிக்கிழமை புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் அந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஹர்திக் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மற்ற இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் எந்த மாணவரும் விடுதியை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings