பிரான்ஸில் இருந்து விமானம் வாங்கினால் நீதிமன்றத்திற்கு செல்வேன்; சுப்ரமணியன் சுவாமி!

பிரதமர் மோடி 3 நாடுகளின் சுற்றுப்பயணமாக பிரான்ஸூக்கு சென்றுள்ளார். நேற்று பிரான் ஸிடமிருந்து 36 ரபேல் ஃபைட்டர் விமானங் களை வாங்குவதற்கு இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத் தானது.
இந்நிலையில், பிரான்ஸிடமிருந்து விமானம் வாங்கினால் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் என பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியவை பின்வருமாறு:-

பிரான்சுடன் விமான ஒப்பந்தம் போடுவது ஊழலை போன்றதாகும். அவ்வாறு செய்வது பா.ஜ.கவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.

இந்த உலகத்தில் ரபேல் விமானங்களை யாருமே வாங்க முன்வர மாட்டார்கள். ஏற்கனவே, அந்த ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டிருந்த பல நாடுகள் இப்போது பின்வாங்கிவி்ட்டன.

இந்தியாவிலும் கூட யாருமே இந்த விமானங்களை வாங்கியதில்லை. இந்த விமானங்களை இந்தியா வாங்கவில்லை எனில் நாங்கள் நிறுவனத்தையே கலைத்து விடுவோம் என டஸால்ட் நிறுவனம் கூறியிருந்தது.

அதனால்தான், சுவிட்சர்லாந்து உள்பட பல நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தும் பின்னர் அவற்றை ரத்து செய்துவி்ட்டன.

பிரான்சை மத்திய அரசு மன்னிக்க விரும்பினால் நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தை இந்தியா வாங்கியிருக்க வேண்டும்.

இதற்கு மத்திய அரசு சம்மதிக்காவிட்டால் நான் கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கும். இது ஊழல் ஒப்பந்தம். பா.ஜ.க.வுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும். பிரதம அலுவலக அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு தவறாக அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

ஆனால், இந்த விமானத்தை வாங்காமலிருப்பதுதான் பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துரை.

இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி எச்சரித்து ள்ளார்.
Tags:
Privacy and cookie settings