உடகுக்கு வெளியாக பெண் உயிரின் கரு முட்டையானது ஆன் விந்துடன், இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல் முறையாகும். பொது வழக்கில் ஆங்கிலத்தில்,  இதனை சுருக்கமாக IVF (In vitro fertilization) என அழைப்பர். 
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் ! பகுதி 1
இதனை வெளிச்சோதனை முறை கருக்கட்டல், அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் என்கிறோம். 

அதாவது இன் விட்ரோ (in vitro) எனப்படும் செயற்கைக் கல முறை மூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும்.
இவ்வாறு கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின்  கருப்பையில் தக்க முறையில் வைப்பதன் மூலம் 

அக்கரு வளர்ந்து முளையமாலி அப்பெண், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம்.

பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமிருந்தும், இயற்கையாக சில சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, இம்முறையினால் குழந்தை பெற்றுக் கொள்ள உதவலாம்.

இம்முறையால் பிறக்கும் குழந்தையை சாதாரண பேச்சு வழக்கில் சோதனைக் குழாய்க் குழந்தை (Test tube baby) என அழைப்பார்கள். 

(இருப்பினும் சோதனைக் குழாய் என்பது உயிரியல், வேதியல் ஆய்வு கூடங்களில் பயன்படுத்தப்படும்  கண்ணாடி அல்லது நெகிழியினாலான குழாய் போன்ற அமைப்புடைய பொருட்க ளாகும்.

ஆனால் பொதுவாக வெளிச் சோதனை முறை கருக் கட்டலில் பயன்படுத்தப்படும் உபகரணம் தட்டையான Petri dish அன அழைக்கப்படும் உபகரணமாகும்).
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் ! பகுதி 1
சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்களுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்து வத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

1978 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி, உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுன், இங்கிலாந்தில் பிறந்தது.

இன்றைய நிலையில், கருத்தரிக்க இயலாத தம்பதியர் சோதனைக் குழாய் முறையில் ஒன்று முதல் 5 நாட்களிலேயே கரு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நவீன வசதிகள் உள்ளன.

தற்போது சோதனைக் குழாய் முறை மூலம் குழந்தை களை பெறுவது என்பது சாதாரண நிகழ்ச்சி ஆகி விட்டது. 

பெண்க ளுக்கு கருமுட்டை உற்பத்தி 25 வயது களிலே குறைந்து போவதாகவும், 30 வயதுக்கு மேல் திருமணமாகும் பெண்கள் சோதனைக் குழாய் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறவேண்டிய சூழ்நிலை 

உருவாகிக் கொண்டிருப்பது பற்றியும் கேட்டபோது இதுப் பற்றிய விளக்கத்தை டாக்டர் கே.எஸ்.ஜெ யராணி அவர்கள் பின்  வருமாறு விளக்குகிறார்.

இயல்பாக கர்ப்பம் தரிப்பது எப்படி நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? எனும் கேள்வியோடு தொடர்கிறார்...

மனைவியின் சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளிப்பட்டு கருக்குழாய் வழியாக வரும் கணவன்   மனைவி உடல் சேர்க்கையால் கணவரிடமிருந்து உயிரணு வெளிப்படும்  
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் ! பகுதி 1
இரண்டும் கருக்குழாயில் கலந்து சினை முட்டையாகி கருப்பைக்கு வந்து பதியமாகும். இதுதான் இயல்பான கருத்தரிப்பு.

சோதனைக் குழாய் முறையில் உயிரணுவையும் கருமுட்டை யையும் உடலிலிருந்து வெளியே எடுத்து, சேகரித்து ஆய்வகத்தில் ஒன்றாக்கி, பிறகு கருப்பைக்குள் செலுத்தி பதியமாக்கி கருத்தரிக்கச் செய்வார்கள்.

கருமுட்டை யையும் உயிரணுவை யும் ஒன்றாக்கி, கருப்பைக் குழாய், பெண்ணின் உடலுக்குள் செல்லும் செயலாக்க முறையை, வெளியே ஆய்வக த்தில் செய்வது சோதனைக் குழாய் முறையாகும்.

இது படிப்படி யாக ஐந்து கட்டங்களாக நிறை வேற்றப் படுகிறது.

1. கருமுட்டையைத் தூண்டி முதிரச் செய்து விடு வித்தல்.

2. முதிர்ந்து வெளியாகும் கரு முட்டையைச் சேகரித்தல்

3. உயிரணுக்களைச் சேகரித்து அதில் தரமான வைகளை மட்டும் தனியே பிரித்து எடுத்தல்

4. ஆய்வகத்தில் உயிர ணுவையும் முட்டையையும் ஒன்றாகச் சேர்த்து - கருவாக்கம் செய்து - கரு உயிரை வளர்த்தல்

5. கரு உயிரை கருப்பைக்குள் செலுத்துதல்

இச்செயல் முறையை ஒன்றன் பின் ஒன்றாக விளக்கமாகப் பார்ப்போம். 

முதலில் பெண்ணின் சினைப்பை, ஹார்மோன் போன்றவை பரிசோதனை செய்யப்படுகிறது. 

அதன் பிறகு பிரத்தியே கமான ஹார்மோன் ஊசியைப் போட்டு முட்டையை முதிர்ந்து வரச் செய்ய வேண்டும். முட்டை முதிர்ந்து வரும் நேரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும். 

சரியான நேரத்தில் மயக்க மருந்து கொடுத்து, அல்ட்ரா சவுண்ட் காட்டும் வழியில் சிறிய ஊசியைச் செலுத்தி, கருமுட்டையை வெளியே எடுத்து சேகரிக்க வேண்டும். 

12 முதல் 15 முட்டை களைச் சேகரித்து, கணவரின் உயிரணுவோடு கலக்கச் செய்வார்கள்.

ஏதாவது ஒரு உயிரணு கருமுட்டையை துளைத்து, கருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்து சினை முட்டையாக மாற்றும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவ்வாறு நிகழாவிட்டால், 
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் ! பகுதி 1
முட்டையின் மேல் துளையிட்டு பலகீனமாக்கி, தரமான ஒரு உயிரணுவைப் பிடித்து, முட்டையின் பலகீனப் பகுதியோடு உள்ளே புகுந்திடச் செய்வார்கள்.

பின்பு அவற்றை செயற்கை கருப்பைப் போன்ற இங்குப்பேட்டரில் (Incubator) வைத்து கருத்தரிக்கிறதா? செல்கள் பிரிகிறதா?

சரியா வளர்கிறதா? என்று கண்காணிப்பார்கள். பல செல் நிலைக்கு வந்து, கரு உயிர் ஆனா பிறகு கருப்பைக்குள் செலுத்துவார்கள்.

இதற்கு இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ஆகும். பின்பு கரு உயிர் இங்கு பதியமாகும். அதை அல்ட்ரா சவுண்ட், ரத்தப் பரிசோதனை மூலம் உறுதி செய்து, பெண் கருத்தரித்து விட்டதை அறிவிப்பார்கள்.

(சோதனைக் குழாய் கருவாக்கம் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில நாளில் அதைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்த தயாராக இருக்கும் போது 

அந்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக் கோளாறோ, அத்தியாவசியப் பயணச் சூழலோ ஏற்பட்டால் அதற்கும் மாற்று வழி இருக்கிறது.

கருவாக்கம் செய்யப்பட்ட சினை முட்டையை அதனுள் இருக்கும் கரு உயிரோடு திரவ நைட்ரஜெனில் மைனஸ் 196 டிகிரி வெப்பத்தில் உறைய வைத்து விட வேண்டும். 
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் ! பகுதி 1
பின்பு அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த முறைக்கு 'கிரையோ பிரசர்வேஷன் (Cryo Preservatin) என்று பெயர்).

பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும் கரு உயிரில் ஒன்று பதியமா காமல் போனாலும், இன்னொன்று பதியமாக வேண்டும் என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்டவை கருப்பைக்குள் செலுத்தப்படும். 

சில தருணங்களில் இரண்டுமே பதியமாகி, இரண்டு குழந்தைகள் வளரத் தொடங்கி விடும்.
இது தான் சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் செயலாக்க வழிமுறையாகும் என்று விளக்கி முடித்தார் டாக்டர் கே.எஸ். ஜெயராணி.