தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !

ஜில்லென்ற தர்பூசணியின் சுவையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. கொளுத்தும் வெயிலில் சுவைக்கும் போது, தாகம் தணியும். உடலும், உள்ளமும் குளிரும்.
தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !
தர்பூசணியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன என்பது பலர் அறியாத விஷயம். தர்பூசணியில் பசலைக் கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. 

வைட்டமின் சி, ஏ, பி 6, பி1 உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரி, கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது. 

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. 
அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றம் சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். 

கண்களைப் பராமரிக்க வைட்டமின் ஏ, மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சியையும் கொண்டு செயல்படுகிறது. 

தமனி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது. உடலிற்கு தேவையான இன்சுலினையும் மேம்படுத்தும். 

கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.
தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !
சதையுடன் விதையும் பலன் தரக்கூடியது. விதையில் அதிக அளவில் ஊட்டச் சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது. 

தர்பூசணியை சாப்பிட மட்டுமல்லாமல், தற்போது பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்து கிறார்கள். தர்பூசணி ஜுஸ், பாயசம், ஸ்வீட், ஐஸ்கிரீம் என இதில் ஏராளமான உணவுப் பொருட்களும் தயாரிக்கிறார்கள். 
மூலநோயின் பற்றிய விளக்கமும், காரணமும்?
மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி சந்தைப் படுத்தும் தொழில் நுட்பம், தர்பூசணியில் தற்போது தான் சாத்தியமாகி வருகிறது. தர்பூசணி தென் ஆப்ரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. 

முதலில் எகிப்தில் அதிகளவில் பயிரிடப்பட்டது. 7ம் நூற்றாண்டில் இந்தியாவிலும், 10ம் நூற்றாண்டில் சீனாவிலும் தர்பூசணி அறிமுகமாகி யுள்ளது. 

உலகில் தர்பூசணியை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்குவது குறிப்பிடத் தக்கது.

இயற்கை வயக்ரா
தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !
தர்பூசணியில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்தப் பழம் ஒரு இயற்கை வயாக்ரா என்பது பலருக்கும் தெரியாத உண்மை. தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளது.

இதில் உள்ள பைட்டோ  நியூட்ரியன்ட்ஸ் சத்துகள் உடலை ஆரோக்கிய மாகவும், சுறுசுறுப்பா கவும் வைத்திருக் கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.

தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் சத்துப்பொருள், வயாக்ராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
இவர்கள் லுங்கி, பணியன் அணிய கூடாது தெரியுமா?
ஆனால் பலருக்கும் இது தெரியாததால், இனிப்பான சிவப்பு பகுதியை சுவைத்தவுடன் மீதம் உள்ள தோலை அப்படியே எறிந்து விடுகின்றனர்.

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்து தான் உள்ளது, அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் இன்ப அதிர்ச்சியாகும்.
தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !
தர்பூசணிக்கு ஆசையை அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

தர்பூசணியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு வெள்ளைப் பகுதியையும் மறக்காமல் சாப்பிடுங்கள். நாவுக்கு வேண்டுமானால் அப்பகுதி சுவை யில்லாமல் இருக்கலாம்.
ரத்தக் குழாய் நோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு ?
ஆனால் இல்லற சுவையை கூட்டுவதில் அது வயாக்ராவுக்கு சவால் விடும் பகுதி என்பதை மறந்து விட வேண்டாம்.
Tags:
Privacy and cookie settings