நுகர்வோர் அறிந்து கொள்ள வேண்டியவை !





நுகர்வோர் அறிந்து கொள்ள வேண்டியவை !

Anonymous
By -
நுகர்வோர் விழிப்பு ணர்வு நுகர்வோர் அறிந்து கொள்ள வேண்டிய வை PACKAGING மற்றும் LABEL. நுகர்வோர் விழிப்பு ணர்வு என்பது 
நுகர்வோர்
தாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்துத் தங்க ளுடைய உரிமைகளை ’நுகர்வோர் அறிந் திருத்தல்’ ஆகும்.

நுகர்வோர் விழிப்பு ணர்வை வலியுறுத்தி ஆண்டு தோறும் இந்தியாவில் டிசம்பர் 24 ஆம் தேதி தேதி நுகர்வோர் தினம் ( National Consumer Day, December 24 ) ஆக அனுசரிக்க ப்படுகிறது.

மக்களுக்கு விற்பனை செய் யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப் பானதாகவும், போதிய ஊட்டச் சத்துக்கள் அடங்கியதாகவும் உணவுப் 

பொருட்களுக்கு அறிவியல் அடிப்படை யிலான தரநிர்ண யங்களை உருவா க்குவதற் காகவும், அவற்றின் தயாரிப்பு, சேமிப்பு, விநியோகம், விற்பனை, 

இறக்குமதி ஆகிய வற்றை ஒழுங்கு படுத்துவதற் காகவும் இந்த அமைப்பு, உருவாக்கப் பட்டுள்ளது. 

உணவு பொருள் விற்பனை யில் பேக்கேஜிங் , (PACKAGING) லேபில் (LABEL) இடுதல் இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன .

உணவுப் பொருள் களை தயாரித்த பின்பு, உடனே அல்லது பல நாட்களுக் குப்பின் உள்ளூரில் (அ) வெளியூரில் (அ ) வெளி நாட்டில் பல மைல்களுக்கு அப்பால் விற்பனை யாகும் வரை அது கெட்டுப் போகாமல் ,

காற்றுப் புகா தவாறு, ஒழுகாதவாறு அதன் மணம் கெடா தவாறு, நுகர்வோரை சென்ற டையச் செய்யும் முறைக்கு பேக்கேஜிங் (PACKAGING) என்று பெயர். 

இதில் மொத்தமாக பேக் செய்வது, பல சிறிய பொட்டலங்களாக (POCKET) ஒன்று கூட்டி பேக (PACK)் செய்வது என்று பல வகைகள் உண்டு.
கண்ணாடி, டின், அட்டைப்பெட்டி, பேப்பர், பாலிதீன் பைகள், துணி ப்பைகள், சாக்கு மூட்டைகள், என்று 

பேக்கேஜிங் பல வண் ணங்களில், பல வடிவங் களில், பல அளவுகளில் சீல் செய்து, மூடி இட்டு, தைத்து, விற்ப னைக்கு வரும்.

லேபிள் (LABEL):

இந்த பேக்கேஜ்கள் மேல் ஒட்டப்ப ட்டிருக்கும், பிரிண்ட் செய்யப்ப ட்டிருக்கும், மூடியில் எழுதப் பட்டிருக்கும் அனைத்து விபர ங்களும், 

வாசகங்களும், எழுத்துக்களும் வரிவடிங்களும், முத்திரைகளும் 'லேபிள்' (LABEL) எனப்படும். இந்த லேபில்கள் ஹிந்தி அல்லது ஆங்கி லத்தில் இருக்கலாம். 

இதர பிற மொழிகளில் கூடுதலாக இருக்க லாம். இதன் வடிவங்கள், நிறம், எழுத்துக் களின் அளவு, உயரம் அகலம், எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெளிவாக்கப் பட்டுள்ளது.

இவை அனைத்தும் தெளிவாக, குழப்பமின்றி, நுகர்வோ ரைத் திசை திருப்பா வண்ணம், ஏமாற்றா தவாறும் கண்ணுக்குப் புலப்படும் வகையிலும் இருத்தல் அவசியம்.

இவைகளில் ஏதேனும் குறை, வேறுபாடு, தெளிவற்று இருந்தால் அது "தவறான குறியீடு" இட்டது (Misbranded) என்று கருதப்பட்டு தண்டனை க்குரிய குற்றமாகும். 

உணவு பொட்டல மாக்க என்ன அடிப்படை பேக்கேஜிங் (packaging) பின் பற்றப்பட வேண்டும் ?

துருப்பிடித்த, உடைந்த எனாமல், ஈயம் பூசப்படாத பித்தளை ISI தரமில்லாத அலுமினியம் பாத்திர ங்களை உணவு உபயோக த்திற்குப் பயன் படுத்தக் கூடாது.
பாலிஎதிலின், ஸ்டைரீன் பாலிமர், பி.வி.சி, பாலிபுரோபிலீன், பெட், EAA, EVA, EMAA ஆகிய பிளாஸ்டிக் பொருட்கள் ISI தரத்திற்கு உட்பட்ட வையாக இருந்தால் மட்டுமே உணவுப் பயன்பா ட்டிற்கு உரியதாகும். 

உஷ்ணப்ப டுத்தப்பட்ட பால் / பால் பொருட்கள் தானியங்கி முறையில் பேக் செய்யப்படவேண்டும்.

கண்ணா டிபாட்டில் போன்ற மீண்டும் பயன் படுத்தக் கூடியவை தவிர பிற பேக்கிங் சாதன ங்களை மீண்டும் உபயோகிக்க கூடாது. 

பேக்கிங் செய்ய ப்பட்ட உடன் உரிய வெப்ப நிலையில் சேமிக்க வேண்டும் . எண்ணெய் பேக் செய்ய பயன்படுத் தப்படும் டின் பிளேட்டுகள் ISI தரமுடை யதாக இருக்க வேண்டும்.

கேன்ட் (CANNED), பாட்டில்டு (BOTTLE) ப்ளக்சிபிள் பவுச் (FLEXIBLE POUCH) ஆகிய வற்றில் பழங்கள், காய்கறிப் பொருட்களை பேக் செய்ய வேண்டிய விபரங்கள் BIS முறைப்படி இருத்தல் வேண்டும். 

கேன்ட் (CANNED) இறைச்சி பொருட்கள் லேக்கர் செய்யப்பட்டு கேன் களில் பேக் செய்யப்பட வேண்டும்.

PDW / Mineral Water பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் ISI தரப்படி இருத்தல் அவசியம்.

லேபிளில் இருக்க வேண்டியவை:-
உணவுப் பொருளின் பெயர், வியாபாரப் பெயர். அடங்கியுள்ள பொருட்கள் . தயாரிப் பாளரின் பெயர் மற்றும் முழு முகவரி

இறக்குமதி செய்யப்பட்ட உணவுக்கு இறக்குமதி யாளர்களின் முகவரி

நிகர அளவு / எடை / எண்ணிக்கை.

பேட்ச் / லாட் / கோட் எண்.

பேக்செய்யப்பட்ட / தயாரித்த நாள் / மாதம், வருடம் .

சிறந்த பயன்பாட்டு நாள் / இறுதி உபயோக நாள் .

அடங்கியுள்ள சத்துக்களின் அளவு / 100gm / 100 ml

சைவ உணவுக் குறியீடு (பச்சை).

அசைவ உணவுக் குறியீடு (பழுப்பு).

உணவுச் சேர்க்கைகள் சேர்க்கப்பட்ட வண்ணங்கள், நறுமணம்.

இறக்குமதி செய்த உணவு தயாரான நாட்டின் பெயர் .

உபயோகிக்கும் முறை (விருப்பப்படி).

பாதுகாக்கும் முறை Storage Condition-(விருப்பப்படி).
லேபிளில் இருக்க வேண்டியவை
வனஸ்பதி / பேக்கரி சார்ட்டனிங் பயன்படுத்தி இருந்தால் TFA உள்ளது என்று குறிப்பிட வேண்டும்.

ஹெல்த் க்ளெய்ம் - Health Claim (விருப்பப்படி)

நீயுட்ரீஷன் க்ளெய்ம் - Nutrition Claim (கட்டாயம்)

இவைதவிர "சட்ட அளவியல் முறை" (Legal Metrology)

லேபிள்கள் பிரிண்ட் செய்யும் முறை:

லேபிள்களில் வெளியி டப்படும் வாசகங்கள் தெளிவாக, கண்ணுக்குப் புலப்படும் வகையில், திசை திருப்பாமல், எளிமையாக இருக்க வேண்டும். 

லேபிளில் மிக முக்கிய பகுதி எனப்படுவது Principal Display Panel என்பதாகும். லேபிள்களில் பிரிண்ட் ஆகும் எண்கள் / எழுத்துக் களின் உயரம் இதர அளவுகள் உரிய அளவில் இருக்க வேண்டும்.
குழந்தைகள் உணவு (Infant Food). (12 மாதத்திற் குட்பட்ட குழந்தைகள் உணவு) டின்களில் இருக்க வேண்டிய குறிப்புகள், எச்சரிக்கைகள், அளவுகள், வாசகங்கள் பற்றிய விளக்கம் இருக்க வேண்டும். 

எண்ணெய் / கொழுப்பு பாக்கெ ட்களில் "கொல ஸ்டிரால் எதிர்ப்பு" டபுள் ரீ பைன்ட் போன்ற வாசகங்கள் இருக்கக் கூடாது.

உணவுக் கொழுப்பு / எண்ணெய் பாக்கெட்களில் "ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம் இல்லை" என்ற வாசகம் இருக்க வேண்டும். 

"ரீபைண்ட் (உணவு எண்ணெய்) எண்ணெய்" பாக்கெட் டுகளில். குறிப்பிட்ட தாவர எண்ணெயின் பெயர் இருக்க வேண்டும்.

இரண்டு எண்ணெ ய்கள் "அக்மார்க்" அனுமதியுடன் கலந்து பேக் செய்யப்ப ட்டால் எண் ணெய்களின் அளவு மற்றும் பெயர் குறிப்பிட்ட ”Blended Oil” என்று கூற வேண்டும். 

உணவு வண்ண ங்கள்; சேர்க்கப்பட்ட உணவு பாக்கெ ட்களில் "அனுமதிக் கப்பட்ட நிறம் மட்டும் சேர்க்கப் பட்டுள்ளது" என குறிப்பிட வேண்டும்.

செறிவூட்ட ப்பட்ட பால் ஆகியவற்றில் சேர்க்கப்பட்ட உணவுச் சத்து சேர்க்கைகள் குறிப்பிட வேண்டும். பட்டைகளில் காசியா / சின்னமன் என்று குறிப்பிட்டு விற்க வேண்டும். 

செறிவூட் டப்பட்ட பால், கொழுப்பு நீக்கிய பால், நிலைப் படுத்தப் பட்ட பால் ஆகியவை அதன் பெயர் குறிப்பிட்டு விற்க வேண்டும்.

செயற்கை இனிப்பூ ட்டிகள் சேர்க்கப் பட்டால் அதன் பெயர் / குழந்தைகளுக்கு ஏற்றதல்ல / for calorie conscious என்று குறிப்பிட வேண்டும். 

பான் மசாலா பாக்கெட் & விளம்பர ங்களில் சுப்பாரி (பாக்கு) சுவைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று குறிப்பிட வேண்டும்.
ஐஸ்கிரீம் / Dessert ஆகியவ ற்றில் பால் கொழுப்பு / உணவு எண்ணெய் / தாவரக் கொழுப்பு அடங்கியது என்று குறிப்பிட வேண்டும்.

உப்பு பாக்கெட் களில் அயோடின் கலப்பதற்கு / இரும்பு சத்து கலப்பதற்கு / மிருக உபயோக த்திற்கு / மருந்துக்கு / preservative க்கு என்று 

அதன் பயன்பா ட்டிற்கு. உணவு சத்துக்கள் சேர்க்க ப்பட்ட உணவுகளின் மேல் செறிவூட்டப் பட்டது என்று குறிப்பிட வேண்டும்.

லேபில்களின் மேல் உணவுச் சட்டம் விதிகள் பற்றிய குறிப்புகள் இருக்கக் கூடாது. மருத்துவர் களால் பரிந்துரை க்கப்பட்டது என்று குறிப்பிடக் கூடாது. 

குடிதண்ணீர் பாட்டில்களின் மேல் மருத்துவ குணம் கொண்டது என்றோ, குறிப்பிட்ட ஊர், இடத்தை குறிக்கும் வாசகங் களோ, படங்களோ, இருக்கக் கூடாது.
என்ன தகவல் லேபிளில் காட்டப்பட வேண்டும் ? ஏன்?

சிறந்த பயன்பாட்டு காலம் சேமிப்பு விதிமுறை களின் கண்டிஷன் களின் படி பாதுகாக்கப் பட்டால் உண்ண உபயோ கிக்கத் தகுந்த நாள் / மாதத்தைக் குறிக்க வேண்டும்.

லாட் எண் / கோட் எண் / பேட்ச் எண் - என்பவை உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் உணவுப் பொருளை அடையாளம் காணப் பயன்படும் குறியீ டுகளாகும்.

மிருகம், பறவை, மீன், முட்டை ஆகியவை பகுதியாகவோ முழுமை யாகவோ அடங்கியது. இதில் பால் மற்றும் பால் பொருட்கள் அடங்காது.

சைவ உணவு :-
சைவ உணவு
அசைவ உணவில் அடங்காதவை அனைத்தும் சைவ உணவு ஆகும். “இறுதி உபயோக நாள்" (Expiry Date ) என்பது இந்த நாளுக்குப் பின் விற்கக் கூடாது என்பதை குறிக்கும். 

இது இந்தியாவில் கடைபிடி க்கப்படும் முறையாகும். சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பொருட்களுக்கு பல்வேறு குறி யீடுகளை வை த்துள்ளன.

லேபிளில் இடப்படும் குறியீடுகள் (Sign) என்பது மறு சுழற்சி (Recycle), பாதுகாப்பு (Safety), தரம் (Quality) மற்றும் 

உபயோகமுறை (Usage) போன்றவை களை குறிப்பதாகும் இக்குறி யீடுகள்(Sign) ஆயிரக் கணக்கில் உள்ளன.
Tags: