கருணாஸ் தேவர்  தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழக அரசியல்வாதி. இவர் தஞ்சாவூர் மாவட்டதை சேர்ந்த பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்ற கிராமத்தில் பிப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.

முக்குலத்தோர் புலிப்படை - Mukkulathor Pulipadai !
இவர் "முக்குலத்தோர் புலிப்படை" என்னும் சாதி அமைப்பு சார்ந்த அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். 

இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

அவர் அந்த தேர்தலில் எதிர்த்து நின்ற சு.ப.தங்கவேல் dmk அவர்களை விட  8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.