மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) என்பது நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக ஆர். மகேந்திரன் நியமிக்கப்பட்டார். 
மக்கள் நீதி மய்யம் - மநீம - Makkal Neethi MAIYAM
இவர் 30 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றி யுள்ளதாகவும், விவசாயத் துறையில் பயிர் சாகுபடி மற்றும் ஏற்றுமதியில் திறன் மிக்கவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அருணாச்சலம் பொதுச் செயலாளராகவும், சுகா பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். 

தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா, கமிலா நாசர், செளரிராஜன், சி. கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன் ஆகியோரை செயற்க் குழு உறுப்பினராக கமல் ஹாசன் அறிவித்தார்.

கட்சியின் சின்னத்தில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், மற்றும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களையும், நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல் கூறினார். 

தேர்தல் ஆணையத்தால் மக்கள் நீதி மய்யத்திற்கு "கை மின்விளக்கு" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
மக்கள் நீதி மய்யம் மநீம Indian Election Symbol Battery-Torch.png கமல்ஹாசன் 142
இந்திய ஜனநாயகக் கட்சி இஜக Indian Election Symbol Auto Rickshaw.png பச்சமுத்து பாரிவேந்தன் 40
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சமக Indian Election Symbol Battery-Torch.png சரத்குமார் 33
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தமஜக கே. எம். சரீப் 9
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) ஜத(ச) தேவ கௌடா 3