இஸ்லாம் கூறும் இறைதூதர்கள் (நபிமார்கள்) எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கையாகும்.
உலகின் முதல் மனிதன் ஆதம் முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது.
பணம் மற்றும் காசுகளை தானம் கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல. இதையும் கடந்து சின்னச்சின்ன நற்கருமங்களும் இஸ்லாத்தின் பார்வையில் தர்மங்களே.
வசதி படைத்தவர் தங்களிடம் உள்ள செல்வங்களை தர்மம் செய்கிறார்கள். வசதியற்றவர்கள், தாங்கள் செய்யும் நற்கருமங்களின் வழியே தர்மம் செய்கிறார்கள்.
இவ்வாறு ஏழை பணக்காரன் இருவருக்கும் தர்மம் செய்யும் வாய்ப்பினை இஸ்லாம் வெவ்வேறு வழிகளில் வழங்கி இருவரையும் சமநிலைப் படுத்துகிறது.
இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய் என்பது திருக்குர் ஆன் (28:77) வசனமாகும்.
உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மம்.
வழி தவறியவருக்கு வழி காட்டுவதும் தர்மம். பார்வையற்றோருக்கு வழி காட்டுவதும் தர்மம்.
கல், முள், எலும்பு போன்றவற்றை நடை பாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம்.
உங்களது வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மமே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் : அபூதர் (ரலி), நூல் : திர்மிதி) மேற்கூறப்பட்ட நபிமொழியில் பலவிதமான தர்ம சிந்தனை கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் ஒன்றுகூட பொருள் சம்பந்தப்பட்டது கிடையாது. தர்மம் என்றால் இஸ்லாத்தின் பார்வையில் பொருளுடன் மட்டும் தொடர்புடையது அல்ல.
அது பரந்த மனப்பான்மையுடன் தொடர்புடையது என்பதை இதன் மூலம் அறியலாம்.