வளைகுடா (gulf) என்பது நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பாகும். எடுத்துக்காட்டுகள்: கட்ச் வளைகுடா, காம்பத் வளைகுடா, மன்னார் வளைகுடா. 
வளைகுடா செய்திகள் அனைத்தையும் படித்து தெரிந்து கொள்ள !
மேலும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளை வளைகுடா நாடுகள் என்பர். 

அராபிய பாரசீக வளைகுடா நாடுகள் அல்லது சுருக்கமாக வளைகுடா நாடுகள் (Gulf States) என்பவை நடுவண் ஆசியாவில் பாரசீக வளைகுடாவினை ஒட்டி அமைந்துள்ள 

எண்ணெய் வளமிக்க முடியாட்சிகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளைக் குறிக்கும். 
ஈராக் மற்றும் ஏமன் நாடுகளும் பெர்சிய வளைகுடாவினை ஒட்டியிருந்தாலும் அரபு நாடுகளாக இருப்பினும் அவை வளைகுடா நாடுகளாகக் கருதப்படுவதில்லை. 

பாரசீக வளைகுடாவின் அனைத்து அரபு நாடுகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் மிகுந்த வருமானம் பெறுகின்றன. 

சவுதி அரேபியாவைத் தவிர ஏனைய நாடுகள் சிறிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. இந்த வளைகுடா பகுதியில் நடக்கும் செய்திகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்வோம்.