அ இ அ தி மு க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் !

தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன், டிசம்பர் 24, 1987 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார். 

அ இ அ தி மு க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் !
அவரது மறைவுக்குப் பிறகு யார் முதல்வராவது? என்ற குழப்பம்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எழுந்தது. 

ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்.ஜி.ஆர். இன்  மனைவியார் tஜானகி இராமச்சந்திரன், முதல்வரானார். 

ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா அவர்கள்  ஏற்கவில்லை. 

மொத்தம் 132 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட அ.இ.அ.தி.மு.க.வில் 33 பேர் மட்டும்  ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். 

எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியண் அவர்களும் , ஜானகியை ஆதரித்தார்.

எம் ஜி ஆர் க்கு பிறகு புதிய அரசின் மீதான   நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனவரி 26, 1988 இல் நடத்தப்பட்டது. 

தி.மு.க., மற்றும் இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. 

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும், ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே, சட்டமன்றத்தில் சச்சரவு ஏற்பட்டு விட்டது. 

அவைத் தலைவர், ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றினார், வெறும் 111 உறுப்பினர்களுடன், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். 

ஜானகி இராமச்சந்திரன், அந்த வாக்கெடுப்பில்  வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த பிரச்னை காரணமாக, ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.

ஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின.  

மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி ஆகிய இரு தொகுதிகளுக்கும்  நிர்வாக காரணங்களால், தேர்தல்  இரண்டு மாதங்கள் கழித்து, மார்ச் 11 ஆம் நாள் அன்று  நடைபெற்றது. 

அதற்குள் அ.தி.மு.க. கட்சி ஒன்று சேர்ந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னமே ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையில்  அக்கட்சியே, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 

பின்பு ஜெயலலிதா தலைமையில், 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் வென்று, செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்  தலைமையில் ஆட்சி அமைத்தது. 

2014 ஆம் ஆண்டு  மக்களவைத் தேர்தலையும், 2016 ஆம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தலையும் எவ்வித  கூட்டணி இல்லாமல்  வெற்றி கண்டது.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)