அதிகாலை 3-5 மணிக்கு எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவைகளை இந்நேரத்தில் செய்வது மிகவும் நல்லது. 
மனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள் பற்றி தெரிந்து கொள்ள !
காரணம் விடியற்காலையில் 3.30 மணி முதல் 5 மணி வரை வெட்டவெளியில் ஓசோன் வாயு வீசுகின்றது. 

அந்த நேரத்தில் எழுந்து தியானம் செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியை பெறுவோம். 

உதாரணமாக நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை. 

இதற்கு காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த ஓசோன் வாயுவை சுவாசிப்பது தான். 

ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது. மூச்சு விட இயலாது சிரமபடுவர். 
காலை 5-7 மணிக்கு கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும். இந்நேரத்தில் எழுந்திருபவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. 

மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும், அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது. 

விடியலில் எழுந்திருபவன் வாழ்கையில் தோற்றதில்லை என்பது மருத்துவ பழமொழி. வாழ்வில் என்றும் அவர்களுக்கு வெற்றிதான் கிடைக்கும்.