புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனிவேலு மகாலட்சுமி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக பழனிவேலு, பல நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
நீண்ட நாட்களாக, பழனிவேலுவை தொடர்பு கொள்ள முடியாததால் அதிர்ச்சியடைந்த காவிரி, நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் தனது அண்ணன் காணாமல் போனதாக புகார் அளித்தார். காவலர்கள் இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் மனைவி மகாலட்சுமியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் மகாலட்சுமி தனது கணவனை கொலை செய்து விட்டு, மகள்களுடன் சேர்ந்து உடலை புதைத்து விட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals
இதில் ஆத்திரமடைந்த மகாலட்சுமி தனது கணவரை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் பழனிவேலும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் அருகே இருந்த கழிவறையில் குழித்தோண்டி புதைத்தாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Thanks for Your Comments