உங்க ரயில் டிக்கெட் பயண தேதியை இனி மாற்றலாம்.. எப்படி?

0

ரயில் பயணிகளுக்கு ஒரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இனி தங்களுடைய பயண தேதியை நினைத்தபடி மாற்றலாம். 2026 ஜனவரி மாதம் முதல் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயண தேதியை ரத்து செய்யாமலேயே மாற்றிக் கொள்ளலாம். 

உங்க ரயில் டிக்கெட் பயண தேதியை இனி மாற்றலாம்.. எப்படி?
இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், புதிய தேதியில் சீட் இருந்தால் மட்டுமே இந்த வசதி கிடைக்கும். இல்லையென்றால், காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படலாம்.


புதிதாக அறிமுகம் செய்யப்படும் வசதியின் கீழ் ரயில் டிக்கெட்டின் வகுப்பையும் (class) மாற்றிக் கொள்ளலாம். ஆனால், குறைந்த வகுப்பிற்கு மாற்ற முடியாது. அதிக வகுப்பிற்கு மட்டுமே மாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். 


இதற்கு முன்பு பயண தேதியை மாற்ற வேண்டுமென்றால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியிருந்தது. AC First Class அல்லது Executive Class டிக்கெட்டை ரத்து செய்தால் 240 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. 


இந்த சிரமத்தை போக்கவே இந்திய ரயில்வே இந்த புதிய வசதியைக் கொண்டு வந்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைப்படி, ஆன்லைனில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் தேதியை ரயில் பயணிகள் மாற்றிக் கொள்ளலாம். 


இதற்காக எந்த கூடுதல் பணமும் நீங்கள் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால், நீங்கள் மாற்ற விரும்பும் புதிய தேதியில் சீட் (இருக்கை) காலியாக இருக்க வேண்டும். அப்படி சீட் காலியாக இருந்தால் மட்டுமே உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படும். இல்லையென்றால் அது காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்.

வீட்டிலேயே வொர்க்கவுட் செய்வதன் மூலம் நீங்கள் சூப்பர் ஃபிட் ஆகலாம் !

மேலும், பயணத்தின் வகுப்பையும் மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகப் படுத்தப்படுகிறது. அதாவது, SL, 1AC, 2AC, மற்றும் 3AC போன்ற வகுப்புகளுக்கு இடையே நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். 


ஆனால், இது ஒரு வகுப்பிலிருந்து அடுத்த உயர் வகுப்பிற்கு மட்டுமே சாத்தியம். குறைந்த வகுப்பிற்கு மாற்ற முடியாது. இந்த புதிய விதிமுறை புத்தாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயண தேதியை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். 


டிக்கெட்டை ரத்து செய்யும் சிரமம் இனி இருக்காது. ஆனால், புதிய தேதியில் சீட் கிடைப்பது முக்கியம். மேலும், டிக்கெட் கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

உங்க ரயில் டிக்கெட் பயண தேதியை இனி மாற்றலாம்.. எப்படி?

ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் சீட் கிடைப்பதில் பயணிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிரமங்களுக்கும் இந்திய ரயில்வே தீர்வு கண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பயண தேதி மற்றும் வகுப்பை மாற்றும் வசதி வந்துள்ளது. 

உடலில் அட்ரினல் சுரப்பி செய்யும் அதிசயங்கள் !

இந்த மாற்றம் பயணிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பயணிகளின் வசதிக்காக இன்னும் பல அம்சங்கள் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏழைகள் மற்றும் மிடில் கிளாஸ் மக்களின் பிரதான போக்குவரத்து தேர்வாக உள்ள ரயில்களில் இதுபோன்ற வசதிகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings