கர்நாடக மாநிலம், துமகூர் மாவட்டம், குனிகல் தாலுகா, ஹிலியூர்துர்கா அருகே அமைந்த சவுடனகுப்பே கிராமத்தில் நடந்த சோகமான சம்பவம் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இச்சம்பவத்திற்கு மனைவி மேகனாவே காரணம் எனக் கூறி, அவரது தாய் ஹிலியூர்துர்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2021 அக்டோபர் மாதம் நடந்த இந்தத் திருமணம், வயது வித்தியாசம் காரணமாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இனி உலகில் கொசு என்ற உயிரினமே இருக்காது !
சவுடனகுப்பே கிராமத்தைச் சேர்ந்த சங்கரண்ணா, பார்ப்பதற்கு வயதான தோற்றம் கொண்டவர் என ஊடகங்களில் தவறாக 60 வயதினர் என்று சித்தரிக்கப்பட்டார். ஆனால் உண்மையில் 50 வயதே என்பது குறிப்பிடத்தக்கது.
மேகனா, முன்னர் ஒரு திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெண். இருவரும் காதலில் விழுந்து, பெற்றோர் மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
உலகின் நம்பர் உணவுச் சங்கிலி மெக்டொனால்ட்ஸ் உருவானது எப்படி?
ஆனால், சங்கரண்ணா, தன் தாயை தனியாக விட்டு விட்டு போக முடியாது என மறுத்தார். இதற்கிடையே, மேகனா 4 மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிகிறது. திருமணத்திற்குப் பின் சங்கரண்ணாவின் தாயுக்கும் மேகனாவுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் மூண்டன.
இத்தகராறுகள் கணவர்-மனைவி இடையேயும் நீடித்தன. இரு நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், சண்டையாக மாறியது. இதனால் மனம் உடைந்த சங்கரண்ணா, நேற்று முன்தின இரவு வீட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரை விட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சங்கரண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரண்ணாவின் தாய் அளித்த புகாரின்படி, மேகனா தான் தற்கொலைக்குத் தூண்டியவர் எனக் கூறப்படுகிறது.
போலீசார் மேலும் விவரங்களைத் தேடி விசாரணையைத் தொடர்ந்து நடத்துகின்றனர்.




Thanks for Your Comments