மகாராஷ்டிரா மாநில பெண் டாக்டர் வாழ்க்கையை முடித்துக் கொண்ட வழக்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் கட்சிகளுமே இதை பயன்படுத்தி ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கின.
அவர் மருத்துவமனையில் வேலை செய்வதால், அதன் அருகே உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருந்தபடி தான் தினமும் வேலைக்கு சென்று வந்தாராம். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவர், தனது உள்ளங்கையில் அதற்கான காரணத்தை குறிப்பு எழுதி வைத்திருந்தார்.
மனிதனுக்கு வயதாகும் மர்மம் தான் என்ன?
அதில் பல்தான் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே மற்றும் பல்தானில் தான் வசித்து வந்த அடுக்குமாடி கட்டிட வீட்டின் உரிமையாளரின் மகனான சாப்ட்வேர் என்ஜினியர் பிரசாந்த் பங்கரின் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தன்னை 4 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். பிரசாந்த் பங்கர் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தி வந்ததாக அந்த கைக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கைதான கைதிகளுக்கு போலி உடல்தகுதி சான்று வழங்கும்படி போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இளம் பெண் டாக்டரின் இந்த முடிவு மகாராஷ்ரா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளங்களில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஐடி என்ஜினியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கில் கடந்த 25ம் தேதி அன்று, பெண் டாக்டர் குற்றம் சாட்டிய, சாப்ட்வேர் என்ஜினியர் பிரசாந்த் பங்கரை புனேயில் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸ் காவலில் இருக்கிறார்.
ஆட்டோவில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு !
முக்கிய குற்றவாளியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாக இருந்தார். அவருக்கு போலீசார் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருவதாக பெண் டாக்டரின் உறவினர்கள் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பட்னாவிஸ் அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. ஆளும் கட்சியான பாஜக முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றன.
அவரது குடும்பத்தினருக்கு நீதியை பெற்று கொடுக்கும் வரை நான் ஓயமாட்டேன். இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே, பல்தான் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது ஒருபுறம் எனில், கைதான சாப்ட்வேர் என்ஜினீயரின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகிய இருவருமே, வாழ்க்கையை முடித்துக் கொண்ட பெண் டாக்டர் மீது தான் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.
அவர்கள் பெண் டாக்டர் பற்றி கூறுகையில், "பெண் டாக்டர் எங்களுடைய வீட்டில் ஒரு ஆண்டுக்கு முன்பு வாடகைக்கு குடியேறியிருந்தார். அவரை எங்கள் தாயார் ஒரு மகள் போல கவனித்துக் கொண்டார்.
துருவப் பகுதியில் மணி நேர இரவும், பகலும் ஏன்?
அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும்படி அவர் தான் எங்களது சகோதரனை வற்புறுத்தி வந்தார். பிரசாந்த் பங்கர் அவரை கொடுமைப்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார்.




Thanks for Your Comments