கரூர்ல வந்து பாக்கல... உங்க 20 லட்சம் வேண்டாம் !

0

தனது பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்த நிலையில், விஜய் நேரில் வர வேண்டுமெனக் கூறி அவர் அனுப்பிய 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை ஒரு குடும்பத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கரூருக்கு வரலல்ல உங்க 20 லட்சம் வேண்டாம் !
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சித் தொடங்கிய விஜய், கரூரில் ‘உங்க விஜய் நான் வரேன்...’ என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்கள் பரிதாபமாக பறிபோயின. 

கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் செய்வதற்குரிய அறிகுறி !

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய சூழலில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தவெக தரப்பில் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.


எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் நேரில் ஆறுதல் கூறவில்லையே என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சொகுசு பேருந்து மூலம் கரூரில் இருந்து மாமல்லபுரம் வரவழைக்கப்பட்டனர். 

தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்ட 37 குடும்பங்களை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தார். நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு மாலை 5:55 மணி வரை ஏறத்தாழ 8 மணிநேரம் நடந்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாதது விஜய்க்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பயாப்சி செய்வது என்பது என்ன? #biopsy

இதனிடையே, விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை ஒரு குடும்பத்தினர் அவருக்கே திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூருக்கு விஜய் நேரில் வரவேண்டுமென அவர்கள் கூறி பணத்தை திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து சென்ற நிலையில், கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷின் குடும்பத்தினர் சார்பில் அவரது மனைவி செல்லவில்லை. தங்கள் பெயரை தவறாக பயன்படுத்தி, தங்களுக்கு பதிலாக வேறு யாரோ மாமல்லபுரம் சென்று வந்திருப்பதாகவும் சங்கவி குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings