மகாராஷ்டிராவில் பிறந்த ஆனந்தி ஜோஷி, ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது 9 வயதில் கோபால் ராவ் ஜோஷி என்பவரை மணந்தார். அவரை விட 20 வயது மூத்தவரான கோபால் ராவ் ஜோஷியை ஆனந்தி ஜோஷி மணந்தார். திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் அவரது பெயரை ஆனந்தி என்று மாற்றினார்.
புகைத்து தள்ளும் கர்ப்பிணிப் பெண்களே !
கோபால் ராவ் ஜோஷி, ஆங்கிலம், மராத்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் படிக்கவும் எழுதவும் ஆனந்தி ஜோஷிக்கு கற்றுக்கொடுத்தார். இது அவரது எதிர்கால கல்வி முயற்சிகளுக்கு அடித்தளமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.
இதற்கிடையே, 14 வயதில், ஆனந்தி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், முறையான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால், அந்தக் குழந்தை 10 நாட்களுக்குள் உயிரிழந்துள்ளது. இந்த இழப்பு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
மேலும், அவரை மருத்துவத் துறையில் தொடரத் தூண்டியது. இதைத் தொடர்ந்து, அவரது அடுத்தடுத்த சாதனைகள் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டன.
1880ஆம் ஆண்டில், கோபால் ராவ் அமெரிக்க மிஷனரி ராயல் வைல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் தியோடிசியா கார்பெண்டரின் (நியூ ஜெர்சி) கவனத்தை ஈர்த்தது. அவரது ஊக்கத்தால், ஆனந்தி பென்சில்வேனியாவின் மகளிர் மருத்துவக் கல்லூரியில் இடம்பெற முடிந்தது.
தண்டுவடம் பாதித்தால் என்ன நடக்கும்?
வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற அவரது முடிவு, மரபுவழி இந்திய சமூகத்தின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இருப்பினும், செராம்பூர் கல்லூரி மண்டபத்தில் ஆனந்தி நிகழ்த்திய ஒரு உரையில், பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெண் மருத்துவர்களைப் பயிற்றுவிக்குமாறு இந்து சமூகத்தை அழைத்தார்.
21 வயதில் இந்தியா திரும்பிய ஆனந்திக்கு, அமெரிக்காவின் கடுமையான காலநிலை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஆனந்தியின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவர் பிப்ரவரி 26, 1887 அன்று தனது 22 வயதில் உயிரிழந்தார்.
போனை பிரா, பேண்ட் பாக்கெட்டில் வைக்கலாமா?
கடினமாகப் படித்து முழுமையாக மருத்துவம் செய்ய முடியாத போதிலும், அனைத்து தடைகளையும் தாண்டி தனது இலக்கை அடைந்த இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை டாக்டர் ஆனந்தி ஜோஷி பெற்றுள்ளார்.



Thanks for Your Comments