கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் மாணவிகள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது இந்த வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலா என்ற இடம் உள்ளது. இங்குள்ள மஞ்சுநாதர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. மூலவராக சிவன் இருக்கிறார்.
இந்த கோவிலுக்கு கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் கடந்த ஜூன் மாதம் போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகார் மொத்த கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அந்த புகாரில், 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் வரை கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றினேன்.
தர்மஸ்தலா கோவிலில் பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைக்க கட்டாயப் படுத்தப்பட்டேன். அவர்களின் உடல்களில் ஆசிட் தழும்புகள், காயங்கள் இருந்தன என்று கூறியிருந்தார். இந்த புகார் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.
இந்த விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாஜி தூய்மை பணியாளர் கூறிய இடத்தில் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 13 இடங்களில் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் இன்று 6வது இடத்தில் பள்ளம் தோண்டி உடல்கள் தேடப்பட்டது. அப்போது சிதைந்த மனித எலும்புகூடு கிடைத்துள்ளது. அது ஆணின் எலும்புகூடு என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுவரை எலும்புகூடு சிக்காத நிலையில் இப்போது கிடைத்துள்ளது. இது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.



Thanks for Your Comments