தாராபுரம் சத்யா நேற்றைய தினம் கைதாகி யிருக்கும் நிலையில், அவரை பற்றின மேலும் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
இதில் கடைசியாக சிக்கியவர் தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர். திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியில் தனது தகவல்களை பதிவிட்டு இருந்த நிலையில் தான் அதே மேட்ரிமோனியில் சத்யாவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
தனக்கு கல்யாணமானதை மறைத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, பேக்கரி ஓனரை சத்யா திருமணம் செய்துள்ளார். சத்யா பெயரை ரேஷன் கார்டில் பதிவதற்காக முனைந்த போது தான், கணவர் என்று ஏற்கனவே ஒருவரது பெயர் பதிவாகி யிருந்ததை கண்டு பேக்கரி ஓனர் நிலைகுலைந்து போனார்.
போர் விமானி ஆக ஆசைபட்ட அப்துல் கலாம்.. நடந்தது?
இதனால் சந்தேகமடைந்த பேக்கரி ஓனர் சத்யா குறித்து கொடி முடிக்கே நேரடியாக சென்று விசாரித்த போது தான், அவர் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறித்து வந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த பேக்கரி ஓனரின் தாத்தா, தற்கொலையே செய்து கொண்டாராம். இதற்கு பிறகே சத்யா குறித்து தாராபுரம் மகளிர் போலீசில் புகார் தரப்பட்டதை யடுத்து, தலைமறைவாக இருந்த சத்யாவை போலீசார் தேடி வந்தனர்.
தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் என 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கில் இவர்களிடம் நகை, பணத்தை சத்யா பறித்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, சத்யாவை கைது செய்து விசாரித்தால் தான் உண்மை தெரியவரும் என்பதால், தனிப்படை அமைத்து, சத்யாவை போலீசார் தேடி வந்தனர். சத்யாவின் செல்போன் சிக்னலை வைத்து, தோழி வீட்டில் பதுங்கியிருந்த சத்யாவை நேற்றைய தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரத்துக்கு சத்யாவை அழைத்து வந்து, அரசு மருத்துவ மனையில் சத்யாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப் படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தர விட்டதையடுத்து போலீசார் சத்யாவை கோவை மகளிர் சிறையில் அடைத்தனர்.
அப்போது தன்னுடைய அழகில் அவர்களை மயக்கி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கும் போது, சத்யா அதனை ரகசிய கேமரா மூலமும் வீடியோ எடுத்து வைத்து கொள்வாராம்.
பிறகு அந்த ஆபாச வீடியோ வீடியோவை காண்பித்து, தன்னிடம் உல்லாசமாக இருந்த ஆண்களிடம் நகை-பணம் பறித்து விடுவாராம். இதைத்தவிர, அடிக்கடி செலவுக்கு ரூ.10 ஆயிரம், 20ஆயிரம் என்று அவர்களிடமே கேட்டு வாங்கி வந்துள்ளார்.
ஆபாச வீடியோ சத்யாவிடம் உள்ளதால், இதற்கு பயந்து போன பலரும், சத்யா கேட்கும் பணத்தை தந்து வந்திருக்கிறார்கள்.
புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்யலாம்?
இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் சத்யா மீது புகார் தந்திருக்கிறார்கள். அத்துடன், சத்யா மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் கொடுத்த நகை-பணத்தை மீட்டு தருமாறும் அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் திருப்பூர் சிறைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, போலீசாரை பார்த்து சத்யா, சார். என்கிட்ட இருக்கும் ஆதாரத்தை யெல்லாம் காட்டுறேன். உங்களிடம் எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்.
நீங்கள் ஏழு நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற?
ஆனால், தயவு செய்து என்னுடைய குடும்பத்தை மட்டும் அசிங்கப் படுத்தாதீங்க என்று அழுது கொண்டே சொன்னார். அதற்கு போலீசார், அப்படி யெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம் என்றனர்.
Thanks for Your Comments