திடீரென ஏற்பட்ட வினோத சத்தம்... இரவு முழுக்க உடலுறவு !

0

திடீரென இரவு நேரம் ஏற்பட்ட வினோத சத்தத்தால் மக்கள் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர். ஆனால், அதற்கான காரணம் தெரிந்ததும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

திடீரென ஏற்பட்ட வினோத சத்தம்... இரவு முழுக்க உடலுறவு !
வழக்கமாகப் பல மர்ம சம்பவங்கள் நடக்கும் அமெரிக்காவில் தான் இது நடந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவின் தம்பா விரிகுடா பகுதியில் வசிப்போருக்கு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. 

வினோத சத்தம்: 

அங்கே கடந்த சில காலமாகவே இரவு நேரங்களில் ஏதோ ஒரு மர்மமான சத்தம் கேட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டும் கேட்கும் இந்த ஹை பிட்ச் சத்தத்தால் சுவர்கள் எல்லாம் அதிர்ந்ததாம். 

மேலும், இதனால் குழந்தைகளால் தூங்க முடியாத நிலை ஏற்படுவதாக மக்கள் புகார் அளித்தனர். முதலில் என்ன சத்தம் என்றே பலருக்கும் தெரியாமல் இருந்தது.

சிலர் டைப் க்ளப்பில் இருந்து வரும் சத்தம் எனச் சொல்லி யிருக்கிறார்கள். இன்னும் சிலர் அருகே உள்ள ராணுவ தளத்தில் சீக்ரெட் ஆயுதங்களைச் சோதனை செய்வதாகவும் அந்தச் சத்தம் தான் இது எனக் கூறியுள்ளனர். 

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்ல அங்கே பதற்றம் தோற்றிக் கொண்டது. பல நாட்கள் இதே போல தொடர்ந்து சத்தம் கேட்டுள்ளது. 

என்ன காரணம்: 

குறிப்பாகக் குளிர் காலங்களில் எல்லா நாட்களும் இரவு நேரத்தில் சத்தம் கேட்டதால் அது என்ன சத்தம் என்பதை அங்குள்ள மக்களால் கண்டறிய முடியவில்லை. 

இதையடுத்து ஆய்வாளர்களை உள்ளூர் நிர்வாகம் அழைத்துள்ளது. இந்தச் சத்தத்திற்கான காரணத்தைக் கேட்டதும் அங்குள்ள அனைவருக்குமே ஷாக். 

ஏனென்றால் அந்த சத்தம் மீன்களில் இருந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இரவு நேரங்களில் ஆக்டிவாக உள்ள மீன்கள் தான் இந்த குழப்பமான சத்தத்தை ஏற்படுத்துகிறது. 

இனச்சேர்க்கை நேரங்களில் மீன்கள் இதுபோன்ற சத்தத்தைக் கிளப்புவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதை உறுதி செய்ய அப்பகுதியில் மைக்குகளை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். 

மீன்கள்: 

பிளாக் டிரம் என்ற வகை மீன்கள் பொதுவாகக் குளிர்காலத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபடும். அப்போது ஏற்படும் இந்த சத்தம் 165 டெசிபல் வரை இருக்குமாம். இதுவே அங்கு வினோதமான சத்தத்தை ஏற்படுத்துகிறது.

பிளாக் டிரம் என்ற இந்த மீன் பொதுவாக வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை, மேற்கு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படுகிறது. 

இவை பொதுவாக 2-14 கிலோ வரை வளரும். சில நேரங்களில் 30 கிலோவை தாண்டியும் கூட இருக்கும். பெயரில் இருப்பதைப் போலவே அவை பெரும்பாலும் கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும்.

இதன் உடலில் உள்ள தனித்துவமான கருப்பு கோடுகள் மூலம் இதை நாம் அடையாளப்படுத்தலாம். இந்த வகை மீன்களில் பற்கள் வட்டமாக இருக்கும்.. 

இந்த வகை மீன்களால் சிப்பிகளை கூட எளிதாக உடைக்க முடியும்.. அந்தளவுக்கு வலிமையான தாடைகளைக் கொண்டுள்ளன. இந்த மீன்கள் இனச்சேர்க்கையின் போது தான் இந்த வினோத சத்தம் வந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)