சிறையில் கைதிகள் கர்ப்பம்... ஆண்களுக்கு தடை !

0

மேற்கு வங்க மாநிலம் முழுவதிலும் இருக்கும் பெண்களுக்கான சிறைச் சாலையில் இருக்கும் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமடைவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

சிறையில் கைதிகள் கர்ப்பம்... ஆண்களுக்கு தடை !
இது தொடர்பாக, மேற்கு வங்க சீர்திருத்த இல்லங்களின் அமிகஸ் கியூரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கில், மேற்கு வங்கம் முழுவதும் உள்ள சிறைகளில் காவலில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாகும் விகிதம் அதிகரித்து வருகிறது. கைதிகள் சிறையில் இருக்கும்போது கர்ப்பமாகிறார்கள். 

இதுவரை மேற்கு வங்க சிறைச் சாலைகளில் குறைந்தது 196 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. சமீபத்தில், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் செயலாளருடன் இணைந்து பெண்கள் சிறைச்சாலைக்குச் சென்றேன். 

கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள?

அங்கு ஒரு கர்ப்பிணியும், 15 பெண் கைதிகளும் தங்கள் குழந்தைகளுடன் இருப்பதைப் பார்த்தேன். அந்தக் குழந்தைகள் அனைவரும் சிறையில் பிறந்தவர்கள்.

எனவே, சிறைச்சாலையில் பணிபுரியும் ஆண் பணியாளர்கள், பெண் கைதிகள் இருக்கும் பகுதிக்குள் நுழைவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.

சிறையில் கைதிகள் கர்ப்பம்... ஆண்களுக்கு தடை !

இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் விளக்கமளித்த மேற்கு வங்க சிறைத் துறையின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி, ஆறு வயதுக்குக் குறைவான குழந்தையுடன் இருக்கும் பெண் கைது செய்யப்பட்டால், அந்தக் குழந்தை தாயுடன் தங்க அனுமதிக்கப் படுகிறது.

ஆனால், சிறைகளில் பெண்கள் கர்ப்பம் தரிப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை. இது சாத்தியமுமில்லை. இது என் கவனத்திற்கு வந்தால், கண்டிப்பாகப் பரிசீலிக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். 

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கைத் திங்கள்கிழமைக்கு, நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)