பிஸ்லரி நிறுவனத்தின் அடுத்த வாரிசு... சுவாரசியத் தகவல் !

பிஸ்லரி நிறுவனத்தின் அடுத்த வாரிசு... சுவாரசியத் தகவல் !

0

நம் வாழ்க்கையில் சாதாரண முடிவை எடுப்பது கூட மிகப்பெரிய சவாலாக இருக்கும். அப்படி யிருக்கும் போது, சரியான முடிவை விரைவாக எடுக்க வேண்டு மென்றால் எவ்வுளவு சவாலாக இருக்கும். 

பிஸ்லரி நிறுவனத்தின் அடுத்த வாரிசு... சுவாரசியத் தகவல் !
ரூ.7000 கோடி மதிப்பிலான தன்னுடைய தந்தையின் மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லரியை தலைமையேற்று நடத்த மறுத்த போது, ஜெயந்தி சவுகானும் இதையே தான் அனுபவித்தார். 

டாடா நிறுவனத்திற்கு கை மாறுவதாக இருந்த தங்களுடைய பிஸ்லரி நிறுவனத்தை, எப்படி அவர் அதன் பிறகு தலைமையேற்று நடத்தினார்?

கோடிஸ்வர தொழிலதிபரின் மகளான ஜெயந்தி சவுகான் பற்றியே இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

டென்ஷன் மனஅழுத்தம் என்பது?

ஜெயந்தி சவுகான்?

பிஸ்லரி நிறுவனத்தின் அடுத்த வாரிசு... சுவாரசியத் தகவல் !

இந்தியாவின் பழமையான பாட்டில் மினரல் வாட்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பிஸ்லரியின் நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான ரமேஷ் சவுகானின் மகள் தான் ஜெயந்தி சவுகான். 

தம்ஸ்-அப், கோல்டு ஸ்பாட், லிம்கா போன்ற குளிர்பானங்களின் வியாபாரத்தை இந்தியாவில் பெருக்கியதற்கும் ஜெயந்தி சவுகானின் தந்தை முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். 

தற்போது ஜெயந்தி சவுகான் 24 வயதில் இருந்து பிஸ்லேரியின் ஒரு பகுதியாக இருந்து இப்போது துணைத் தலைவராக பணியாற்றுகிறார். 

அவர் தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் பணிபுரிந்தார் மற்றும் நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தை பொறுப்பேற்றார். 

செல்வி தொழிற்சாலைகளைப் புதுப்பிக்கவும், பல்வேறு செயல்முறைகளுக்கு ஆட்டோமேஷனைக் கொண்டு வரவும் சவுகான் உதவினார்.

நான் திருடன் இல்லை ஆனா ஆளை வெட்ட சொன்னா வெட்டுவேன் !

ஜெயந்தி சௌஹான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங் நிறுவனத்தில் தயாரிப்பு மேம்பாட்டையும், இத்தாலியின் இஸ்டிடுடோ மரங்கோனி மிலானோவில் ஃபேஷன் ஸ்டைலிங்கையும் படித்தார். 

திருமதி சௌஹான் புகைப்படம் எடுத்தல் மற்றும் பேஷன் ஸ்டைலிங்கைத் தொடர லண்டன் ஃபேஷன் கல்லூரிக்குச் சென்றார். லண்டன் பல்கலைக் கழகத்தின் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸில் (SOAS) அரபு மொழியில் பட்டம் பெற்றார்.

பிஸ்லரி நிறுவனத்தை விற்க முடிவு

பிஸ்லரி நிறுவனத்தின் அடுத்த வாரிசு... சுவாரசியத் தகவல் !

பிஸ்லரி நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு ஜெயந்தி சவுகான் எந்த ஆர்வமும் காட்டாததால், இதை விற்க முடிவு செய்தார் ரமேஷ் சவுகான். கொஞ்ச காலத்திற்கு யாருடைய பொறுப்பிலும் இல்லாமல் பிஸ்லரி நிறுவனம் செயல்பட்டு வந்தது. 

முடிவில், டாடா நிறுவனத்திடம் பிஸ்லரி நிறுவனத்தை விற்க முடிவு செய்தார் ரமேஷ். 7000 கோடி ரூபாய்க்கு பிஸ்லரி நிறுவனத்தை வாங்க முன்வந்தது டாடா நிறுவனம். 

ஆனால் ஒரு சில காரணங்களால் பிஸ்லரி நிறுவனத்தை கைப்பற்றும் முடிவிலிருந்து விலகியது டாடா நிறுவனம்.

இந்நிலையில் உடனடியாக ஊடகங்களை அழைத்த ரமேஷ், ஏஞ்சலோ ஜார்ஜை தலைமை நிர்வாகியாக கொண்டு திறமையான பணியாளர்களைக் கொண்டு இனி பிஸ்லரி நிறுவனத்தினை  ஜெயந்தி சவுகான் தலைமையேற்று நடத்துவார் என அறிவித்தார்

நிறுவனத்தை ஏற்று நடத்த மறுத்தார்?

பிஸ்லரி நிறுவனத்தின் அடுத்த வாரிசு... சுவாரசியத் தகவல் !

ஜெயந்தியின் பெரும்பாலான குழந்தைப்பருவம் டெல்லியிலும், மும்பையிலும், நியூயார்க் நகரத்திலும் கழிந்தது. JRC என அறியப்படும் ஜெயந்தி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேஷன் வடிவமைப்பு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 

அது மட்டுமின்றி, லண்டன் சென்று ஃபேஷன் வடிவமைப்பு மற்றும் புகைப்படக் கலையை கற்றுக் கொண்டார். தன்னுடைய 24 வயதில் பிஸ்லரி நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார் ஜெயந்தி. 

அதன் பிறகு நிறுவனத்தை விட்டு வெளியேறுவதும், பின்னர் பணியில் சேர்வதும் என பல வருடங்கள் இது தொடர் கதையாக இருந்தது. 

ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !

பணியில் இருந்த வரை பிஸ்லரி மினரல் வாட்டர், வேதிகா மினரல் வாட்டர், ஃபிஸ்ஸி ஃப்ருட் டிரிங் மற்றும் பிஸ்லரி ஹேண்ட் ப்ரிஃபையர் போன்றவற்றிற்கான நடைமுறைகளை மிகத் தீவிரமாக நெறிமுறைப் படுத்தினார் ஜெயந்தி. 

பிஸ்லரி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக விளம்பரத்திலும் மார்கெட்டிங் விஷயத்திலும் ஆர்வத்தோடு பங்கேற்றார். இவ்வுளவு நாட்கள் பணிபுரிந்தும், ஏன் பிஸ்லரி நிறுவனத்தை தலைமையேற்று நடத்த மறுத்தார்? 

இந்த கேள்விக்கான பதில் என்ன வென்றால், நம் எல்லாரையும் போலவே, வாழ்க்கையையே முற்றிலும் மாற்றக்கூடிய முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஜெயந்தி. 

ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும் பணி என்பது அவ்வுளவு எளிதானதல்ல. அது சிக்கலும் சவாலும் நிறைந்த ஒன்று. ஆனால், இறுதியில் முக்கியமான முடிவொன்றை எடுத்தார் ஜெயந்தி.

தனது தந்தையின் பல கோடி மதிப்பிலான நிறுவனத்தை தலைமையேற்று, அதை வெற்றிகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதே அது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)