உங்கள் கார் கதவை எப்படி திறக்கனும் தெரியுமா? தெரிஞ்சிகோங்க !

0

கார்களின் கதவை எப்படி திறக்க வேண்டும் என்ற சரியான புரிதல் பலருக்கு இல்லை. பலர் கதவுகளை திறக்கும் போது சிரமப் படுகின்றனர். கார் கதவை எப்படி திறக்க வேண்டும் என விரிவாக...

உங்கள் கார் கதவை எப்படி திறக்கனும் தெரியுமா? தெரிஞ்சிகோங்க !
கார் ஓட்ட தெரியவில்லை என்றாலும் எல்லோருக்கும் காரில் அமர்ந்து செல்ல தெரியும் என நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் காரில் அமர்ந்து செல்வது என்பது ஒன்றும் அவ்வளவு ஈஸியான காரியம் இல்லை. 

இதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது. முதலில் கார் கதவை எப்படி திறக்க வேண்டும் என்று கூட சில விதிமுறைகள் உள்ளது. நாம் பல நேரங்களில் இதை தவறாக தான் செய்து கொண்டிருக்கிறோம். 

இதனால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. ஆனால் இதையெல்லாம் நாம் ஒரு பிரச்சனை என கருத்தில் கொள்ளாததால் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே நமக்கு தெரியவில்லை. 

கதவை திறப்பதை சரியாக செய்வதன் மூலம் பல்வேறு பலன்களை நாம் பெற முடியும். கார் கதவை வெளியில் இருந்து திறப்பதை விட உள்ளிருந்து வெளியே வருவதற்காக திறக்கப்படும் போது தான் சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

மருந்து கடையில் வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி !

பொதுவாக காரில் 4பேர் பயணித்தால் 4 பேருக்கும் தனித்தனியாக கதவுகள் இருக்கும். அந்த கதவு வழியாக தான் உள்ளே ஏறவும் வெளியே வரவும் முடியும். 

இப்படியாக நாம் காரில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் பலர் செய்யும் தவறு கார் கதவின் அருகே இருக்கும் அவர்களது கையை வைத்து கார் கதவை திறப்பது தான். 

பலர் இதை பழக்கமாகவே கொண்டுள்ளனர். ஆனால் இது ஒரு தவறான பழக்கமாகும். 

கார் கதவை திறக்கும் போது கால் கதவுக்கு அருகே இருக்கும் கைக்கு பதிலாக அதற்கு மறுபுறம் இருக்கும் கையை தான் நாம் பயன்படுத்த வேண்டும். அப்பொழுது தான் காருக்குள் ஏறுவதும் இறங்குவதும் பாதுகாப்பாக இருக்கும். 

அதாவது டிரைவர் சீட் அல்லது டிரைவர் சீட்டிற்கு பின்புறம் இருப்பவர்கள் தங்கள் இடது கையையும் பயணிகள் முன்பக்க பயணிகள் சீட்டிற்கு பின் சீட்டில் இருப்பவர்கள் தங்கள் வலது கையையும் காரை திறப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.

உங்கள் கார் கதவை எப்படி திறக்கனும் தெரியுமா? தெரிஞ்சிகோங்க !

இப்படி நாம் கையை சரியாக பயன்படுத்துவதால் என்ன பலன் கிடைக்கும் என நீங்கள் கேட்கலாம். இப்படியாக மறுபுறம் இருக்கும் கையை பயன்படுத்துவதன் மூலம் தான் காரின் கதவை பாதுகாப்பாக திறக்க முடியும் என ஆய்வுகள் சொல்கிறது. 

இப்படியாக மறுபுறம் இருக்கும் கையை வைத்து நீங்கள் கதவை திறக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் உடலை சற்று வளைத்து தான் திறக்க வேண்டும்.

அந்த நேரத்தில் உங்கள் கண் ஆட்டோமேட்டிக்காக காரின் ஓஆர்விஎம் பக்கம் திரும்பி விடும். இதனால் வாகனத்தின் பின்புறம் இருந்து யாராவது வருகிறார்களா அல்லது வேறு வாகனம் வருகிறதா என்பதை நீங்கள் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். 

இதன் மூலம் வேறு யாரும் வருவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக கதவை திறக்காமல் நிறுத்தி விட முடியும். இது மட்டுமல்ல மற்றொரு முக்கியமான அட்வான்டேஜும் இதன் இதை பின்பற்றுவது மூலம் கிடைக்கிறது. 

தினமும் சிறிதளவு ஒரு கோப்பை மது ஆரோக்கியமா?

இப்படி மறுபுறம் இருக்கும் கையை நீங்கள் பயன்படுத்தி காரின் கதவை திறப்பதால் கதவை திறக்கும் போது அதிகமான தள்ளு சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டியது இல்லை. 

இதனால் கதவு மெதுவாக திறக்கும் இதன் மூலம் விபத்து ஏற்படும் வாய்ப்பு குறையும். கதவு திறக்கப் படுவதை பார்த்து காருக்கு பின்னால் வருபவர்கள் உடனடியாக சுதாரித்துக் கொள்ள முடியும்.

இது மட்டுமல்லாமல் கதவில் அதிக அழுத்தம் கொடுப்பது கதவு திறக்கும் பகுதியில் அதிக தேய்மானத்தை ஏற்படுத்தும் மறுபக்கம் இருக்கும் கையை பயன்படுத்துவதால் கதவின் தேய்மானம் குறைவாக இருக்கும். 

உங்கள் கார் கதவை எப்படி திறக்கனும் தெரியுமா? தெரிஞ்சிகோங்க !

இதனால் காரின் பராமரிப்பு செலவும் குறையும். ஆனால் இதை நீங்கள் ஒரு பழக்கமாகக் கொண்டு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

பலர் இதை ஒரு சின்ன விஷயம் தான் என நினைப்பார்கள். ஆனால் இந்த சின்ன விஷயம் தான் மிகப்பெரிய ஆபத்தை தடுக்கும். அதே நேரம் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் பலனை தரும். 

ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்வது !

இதனால் இனிமேல் நீங்கள் காரில் இருந்து இறங்கும் போது சரியாக கதவின் மறுபக்கம் இருக்கும் கையை பயன்படுத்தி கதவை திறந்து பழகுங்கள். அதுதான் சரியான விஷயமாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings