மாமியார் அந்த வேஷத்தில்.. கோர்ட்டுக்கு போன மருமகள் !

0

வர வர விவாகரத்து வழக்குகளுக்கு மதிப்பே இல்லாமல் போய் விடுகிறது. எது எதுக்கு டைவர்ஸ் செய்றதுன்னே இல்லையா? இந்த மருமகள் செய்த வேலையை பாருங்க. அதை விட மாமியார் செய்த கூத்தை பாருங்க.

மாமியார் அந்த வேஷத்தில்.. கோர்ட்டுக்கு போன மருமகள் !
உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் மால்புரா என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருகிறார் அந்த இளம்பெண். இவருக்கு கல்யாணமாகி 8 மாதமாகிறது.

இவரும், இவருடைய அக்காவும், ஒரே வீட்டில் மருமகள்களாக நுழைந்துள்ளனர். அதாவது அண்ணன் - தம்பி இருவரை, அக்கா - தங்கைகள் கல்யாணம் செய்துள்ளனர். 

4 பேருமே மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை துவங்கினர். நாளடைவில், எல்லார் வீடுகளிலும் வெடிக்கும் மாமியார் - மருமகள் பிரச்சினை இங்கேயும் ஆரம்பமானது. 

ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள் எப்போது உருவாக்கப் பட்டது?

வழக்கமாக, மாமியார் மருமகள்கள் சண்டை என்றாலே வரதட்சணை, அல்லது குடும்ப விவகாரம் போன்று ஏதாவது இருக்கும். ஆனால், இவர்களின் பிரச்சனையே வித்தியாசமானது.

அந்த மாமியார் எப்போதுமே மேக்கப் போட்டுக் கொள்வாராம். ஆனால், மூத்த மருமகளின் மேக்கப் சாதனத்தை பயன்படுத்தி யிருக்கிறார். 

மூத்த மருமகளின் அனுமதியும் பெறாமல், அவரது மேக்கப் சாதனங்களை மாமியார் தினமும் பயன்படுத்தி வந்துள்ளார். அது மட்டுமல்ல, மருமகளின் மார்டன் டிரஸ்களை போட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளேயே வலம் வருவாராம்.

இதைப் பார்த்ததுமே, மூத்த மருமகளுக்கு கோபம் வந்து விட்டது. எனவே, நேரடியாகவே மாமியாரிடம் இதைப் பற்றி கேட்டுள்ளார். தகராறும் செய்துள்ளார். 

ஆனாலும் மாமியார், மருமகளின் மேக்கப் சாதனங்களையே தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மருமகளுக்கு எரிச்சலாகி விட்டது. 

எங்காவது அவசரத்துக்கு வெளியில் செல்ல வேண்டும் என்றாலோ, அல்லது ஒரு நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றாலோ, மேக்கப் பொருட்கள் இருப்பதில்லையாம். 

எல்லா வற்றையும் மாமியாரே எடுத்து பூசிக் கொள்வதால், மேக்கப் போட முடியாமல் கடுப்பாகி உள்ளார் மருமகள்.

இது குறித்து கேட்டு, பலமுறை வாக்குவாதம் செய்தும் கூட, மாமியார் மேக்கப் போடுவதை நிறுத்தவு மில்லை. இந்த மாமியார்- மருமகள் சண்டையும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

ஒருநாள், மகன்களை அழைத்த மாமியார், வீட்டில் நடந்த விஷயத்தை யெல்லாம் சொல்லி உள்ளார். மேக்கப் பொருளை எடுப்பதால், மருமகள் தன்னை தகாதவாறு திட்டியதையும் புகாராக சொன்னார். 

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும், தங்கள் மனைவிகளை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். மூத்த மருமகள் தான் இதில் சம்பந்தப் பட்டவர் என்றாலும், இருவரையுமே வீட்டை விட்டு அடித்து துரத்தினார்கள்.

வேலை நேரத்தில் டிக்டாக் செய்த பெண் ஊழியரால் பரபரப்பு !

இதனால், அதிர்ச்சி அடைந்த மூத்த சகோதரி, நேராக போலீசுக்கு போய் விட்டார். அத்துடன், ஆக்ரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட குடும்ப ஆலோசனை மையத்திலும் விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த அடுத்தடுத்த புகார்களின் பேரில், 2 மருமகள்கள் மற்றும் மாமியாரை அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும், தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று சகோதரிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள். 

மாமியார் கொடுமை முதல் குடும்ப பிரச்சினை வரை அந்த வீட்டில் நடந்த விஷயங்களை எல்லாம் ஒன்று விடாமல் சொல்லி அழுதுள்ளனர்.

அம்மா பேச்சை கேட்டுக் கொண்டு, தங்களை மூர்க்கத்தனமாக தாக்கிய கணவன்கள் தங்களுக்கு வேண்டாம் என்றும் உடனடியாக விவாகரத்து வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். 

இதனால், என்ன செய்வதென்றே தெரியாத நீதிமன்றம், 2 கணவர்கள் + 2 மனைவிகள் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்திருக்கி றார்களாம். 

எனவே, அடுத்த மாதம் நேரில் இவர்கள் அனைவரையும் நேரில் வர சொல்லி யிருக்கிறாராம் குடும்ப நல ஆலோசகர். இப்போதைக்கு தங்கள் அம்மா வீட்டில் தான் சகோதரிகள் வசித்து வருகிறார்கள். 

மாமியார் தனது மேக்கப் கிட்டை பயன்படுத்தியதற்காக கோபப்பட்டு மருமகள், டைவர்ஸ் கேட்டு கோர்ட் வரை போயிருப்பது, மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது.

கோழி இறகால் சிக்கிய கொலையாளி - இளம்பெண் கொலை !

இதில் ஹைலைட் என்ன வென்றால், குடும்பம் என்றென்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சகோதரர்கள் இருவரும், சகோதரிகளாக தேடிப்பார்த்து கல்யாணம் செய்து கொண்டார்களாம். இது எப்படி இருக்கு.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)