பான் கார்டு தொலைத்தாலும் கவலை இல்லை.. இது தெரிஞ்சா போதும் !

0

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றுடன் பான் கார்டு வைத்திருப்பதும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. 

பான் கார்டு தொலைத்தாலும் கவலை இல்லை.. இது தெரிஞ்சா போதும் !
இதனால், பான் கார்டு வைத்துள்ள பலர், நகல் பான் கார்டையும் உடன் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த நகல் பான்கார்டை வீட்டிலிருந்த படியே எளிதாக பெறலாம்.

நகல் பான் கார்டு எடுப்பதற்கான வழிமுறைகள்:

பான் கார்டு நகல் பெற கூகுளில் Reprint Pan Card என்று டைப் செய்து தேட வேண்டும்.

அதில், Request for Reprint of PAN Card – NSDL என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கிளிக் செய்து, கொடுக்கப்பட்டுள்ள ஆதார் எண், பான் எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

(getCard) #type=(post) #title=(You might Like)

தொடர்ந்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு டிக் கொடுத்து விட்டு Submit செய்யவும்.

இதன் பிறகு, திறக்கும் பக்கத்தில் PAN தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்து Request OTP என்பதை கிளிக் செய்யவும்.

பின், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும், அதை இங்கே உள்ளீடு செய்து நகல் பான் கார்டைப் பெற நெட் பேங்கிங் அல்லது UPI ஐ மூலம் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய பிறகு, உங்களது நகல் பான் கார்டு அடுத்த 7 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)