திருப்பதிக்கு வெல்லம் வழங்கும் கிராமம் தெரியுமா?

0

திருப்பதி என்பது அடிவாரப் பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் உண்மையான பெயர், மனோஹரம் என்பதாகும். 

திருப்பதிக்கு வெல்லம் வழங்கும் கிராமம் தெரியுமா?
2−8−1715 அன்று தொடங்கி, லட்டு, ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்டது. 1803ஆம் ஆண்டு முதல், பக்தர்களுக்கு, பூந்தி வடிவில் விநியோகிக்கப் பட்டது. காலப்போக்கில் தான் லட்டு வடிவிலான மனோஹரம் பிரசாதமாக, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து மட்டும் வெல்லம் உற்பத்தி செய்து, அதனை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அனகப்பள்ளி கிராமம் தான், திருமலை தேவஸ்தானத்திற்கு வெல்லத்தை பிரசாதமாக வழங்குவதில் பெயர் பெற்றது.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் அமடலவலசை மண்டலத்தில் அமைந்துள்ள நிம்மாடா கிராமத்தில், இயற்கை விவசாய முறையில் வெல்லம் உற்பத்தி செய்யப் படுகிறது. 

அறுவடை முதல் தயாரிப்பு வரை முழு செயல்முறையிலும் எந்த இரசாயன பயன்பாடும் இல்லை. பொதுவாக பெல்லம் கிராமம் என்று குறிப்பிடப்படும் இந்த இடத்தில் மட்டும் சுமார் 44 விவசாயிகள் கூட்டாக வெல்லம் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். 

விவசாயிகள் கடந்த ஆண்டு முதல் உள்நாட்டில் விளையும் வெல்லத்தை திருமலைக்கு அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை பல சந்தைகளில் விற்பனை செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் என்ன தான் இயற்கை விவசாயத்துக்கு பெயர் பெற்றிருந்தாலும், தற்போது 5000 ஏக்கர் மட்டுமே இயற்கை விவசாயத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

மீதமுள்ள 20000 ஏக்கரில் தொடர்ந்து ரசாயன உரம் பயன்படுத்தப் படுகிறது. இயற்கை விவசாயம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 32 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 45 ஆக அதிகரித்துள்ளது.

அது மட்டுமில்லாமல் விளை நிலங்களின் முக்கியத்துவம் குறித்தும், அதை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் மாணவர்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

பல மாணவர்கள் விவசாயப் பின்னணி யிலிருந்து வந்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டிய அவர், இந்த அறிவை தங்கள் குடும்பங்களுக்குப் பரப்புவதற்கு அவர்கள் நன்கு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings