ஸ்ரீ வித்யா காதலால் பட்ட அவஸ்தை.. அண்ணி சொன்ன ரகசியங்கள் !

1

கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் காதலித்தது உண்மை தான் என்று அவருடைய சொந்த அண்ணியே பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். எதனால் அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்பதை பற்றியும் பேசி இருந்தார்.

ஸ்ரீ வித்யா காதலால் பட்ட அவஸ்தை.. அண்ணி சொன்ன ரகசியங்கள் !
அதைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு வேறு திருமணம் நடைபெற்ற பிறகு சில வருடங்கள் கழித்து ஸ்ரீவித்யா இன்னொரு நபரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவரால் பட்ட வேதனை குறித்தும் அந்த வீடியோவில் ஸ்ரீவித்யாவின் அண்ணி பகிர்ந்து இருக்கிறார். 

சார்ஜ் என்ற சினிமா பிரமுகரை திருமணம் செய்த பிறகு வாழ்க்கையில் பட்ட அவலங்கள் மற்றும் மூன்று முறை கருக்கலைப்பு செய்தது குறித்து ஸ்ரீவித்யாவின் அண்ணி பகீர் தகவலையும் சொல்லி இருக்கிறார். 

டாய்லெட் பேப்பர் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதானாம் !

அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் 80ஸ் கால கட்டத்தில் தொடங்கி 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சயமான நடிகை ஸ்ரீவித்யாவை சினிமாவில் பலருக்கும் பிடித்திருக்கும் சிரித்த முகமாக இருக்கும் அவருக்குள் வேதனையான இன்னொரு பக்கமும் இருந்திருக்கிறது. 

தன்னுடைய வாழ்நாளில் கடைசி கட்டத்தை மிகவும் வேதனையோடு அனுபவித்த ஸ்ரீவித்யா பற்றி அவருடைய சொந்த அண்ணி தற்போது பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

ஏற்கனவே ஸ்ரீவித்யாவும் கமல்ஹாசனும் காதலித்து வந்த செய்திகள் இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அது குறித்து வெளிப்படையாக ஸ்ரீவித்யா பேசிய வீடியோவும், கமல்ஹாசன் பேசிய வீடியோவும் பலரும் பார்த்திருப்போம். 

ஆனால் கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவின் அம்மா தனக்கு ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து வைக்க முடியாது என்று சொன்னதால் கோபப்பட்டு போயிருந்த நிலையில் பிறகு வேறொரு திருமணத்தை செய்து விட்டார். 

ஆனால் இதை எதிர்பார்க்காத ஸ்ரீவித்யா ரொம்பவே அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பிறகு தன்னுடைய த ஏமாற்றங்களை மனதிற்குள்ளே புதைத்து வைத்துக் கொண்டு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். 

அந்த நேரத்தில் தான் சார்ஜ் என்ற சினிமா பிரமுகரை சந்தித்திருக்கிறார். அவருடைய நடவடிக்கையை பார்த்து பிடித்து போய் இருவரும் காதலித்து திருமணமும் செய்து இருக்கிறார்கள். 

அது போல சார்ஜ்காக ஞானஸ்தானம் பெற்று அவர் சம்பிரதாயத்தையே ஸ்ரீவித்யாவும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார். ஆனால் ஸ்ரீவித்யாவிற்கு திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு விருப்பமே கிடையாதாம். 

இத்தனை நாட்களாக ரெஸ்ட் இல்லாமல் நடிச்சாச்சு இனியாவது வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். 

மூளை சுறுசுறுப்பாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !

ஆனால் சார்ஜ் அவரை கட்டாயப்படுத்தி மீண்டும் நடிக்க வைத்திருக்கிறார். ஸ்ரீவித்யாவும் ஏற்கனவே ஒரு முறை காதலில் பட்ட வேதனை போதாது என்று இப்போதும் திருமணமும் முடிந்து விட்டது.

இதற்கு மேலும் இதில் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்று சார்ஜ்க்காக தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் ஸ்ரீவித்யா கர்ப்பமாக இருந்த போது சார்ஜ் கட்டாயப்படுத்தி அதை கருக்கலைப்பு செய்ய வைத்திருந்தார். 

மருத்துவ மனையில் கருகலைப்பு செய்த நேரத்தில் ஸ்ரீவித்யா அவ்வளவு அழுது கொண்டிருந்தார் என்று அவருடைய அண்ணி வேதனையோடு கூறி இருக்கிறார். 

அதுவும் ஸ்ரீவித்யாவிற்கு மூன்று முறை சார்ஜால் அபார்ஷன் செய்யப் பட்டதாம். இது மேலும் ஸ்ரீ வித்யாவை மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டதாம். 

குழந்தைகளோடு நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீ வித்யாவை மெஷின் போல பணம் சம்பாதிக்க தன்னை பயன்படுத்திக் கொண்டிருந்த சார்ஜ் மீது ஸ்ரீவித்யாவிற்கு அதிகமாக கோபம் ஏற்பட தொடங்கியதாம். 

ஸ்ரீ வித்யா காதலால் பட்ட அவஸ்தை.. அண்ணி சொன்ன ரகசியங்கள் !

அந்த நேரத்தில் ஸ்ரீவித்யா அத்தனை வருடங்களாக சம்பாதித்த சொத்துக்கள் எல்லாமே சார்ஜ் தன்னுடைய வசத்துக்கு மாற்றி வைத்திருந்தாராம்.

பிறகு ஸ்ரீவித்யா இதற்கு மேலும் பொறுத்திருந்தால் சரிப்பட்டு வராது என்று தான் 1980ல் விவாகரத்து வாங்கி அதற்குப் பிறகு அவருடைய சொத்துக்களையும் சார்ஜிடமிருந்து நீதிமன்றம் மூலமாக வாங்கி இருந்தார் என்றும், 

படுக்கைக்கு செல்வதற்கு முன் பால் குடிப்பீங்களா? இத படிங்க !

ஆனால் ஸ்ரீவித்யாவின் மறைவிற்குப் பிறகு அந்த சொத்துக்கள் எல்லாம் ஆதரவற்றவர்களுக்கும், ஏழை எளிய மாணவர்களின் படிப்பு உதவி தொகை வழங்குவதற்காகவும், நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காகவும் உயிலில் எழுதி வைத்திருந்தாராம்.

அது போல தன்னுடன் வேலை செய்து வந்த வேலையாட்கள் ஆளாளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயையும் ஸ்ரீவித்யா வழங்கி இருந்தார் என்று கண்ணீரோடு அவருடைய அண்ணி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

Post a Comment