பொங்கல் பரிசு இவர்களுக்கு மட்டும்... தமிழக முதலமைச்சர் !

0

பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி முதல் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

பொங்கல் பரிசு இவர்களுக்கு மட்டும்... தமிழக முதலமைச்சர் !
அத்துடன் அந்த பொங்கல் பரிசு தொகுப்பு யார் யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற அறிவிப்பும் அதில் இடம் பெற்றுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்பட இருக்கிறது. 

இதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து விட்டதாக தெரிவித்திருக்கும் தமிழ்நாடு அரசு பொங்கல் வேட்டி சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டிருப்பதாக கூறியுள்ளது. 

மேலும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்தப் பணம் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரொக்கமாக உரிய நர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டாலும், அதில் சிலருக்கு விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. 

அதாவது, மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாது. 

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் அதேவேளையில் கலைஞர் உரிமைத் தொகையும் முன்கூட்டியே பயனாளர்களுக்கு கொடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்படும் இந்த தொகை இம்மாதம் ஜனவரி 10 ஆம் தேதி உரிய மகளிருக்கு கிடைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)