ஆடையின்றி போட்டோஷூட் வெளியிட்ட கணவன்.. மனைவி ரியாக்‌ஷன் !

0

ரன்வீர் சிங் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் பார்த்து நடிகை தீபிகா படுகோன் இது தான் சொன்னதாக என்று தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆடையின்றி போட்டோஷூட் வெளியிட்ட கணவன்.. மனைவி ரியாக்‌ஷன் !
பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான ரன்வீர் சிங் தன் நடிப்பு தாண்டி, ஆஃப் ஸ்க்ரீனிலும் பயங்கர எனர்ஜியாக இருக்க கூடியவர். அந்த எனர்ஜிக்காவே அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். 

அது மட்டுமல்ல, தன்னுடைய வித்தியாசமான உடை, மற்றும் பேச்சுக்களால் அவ்வப்போது கவனம் ஈர்க்கும் ரன்வீர் சிங், நேற்று முன் தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நிர்வாணபுகைப்படங்களை வெளியிட்டார்.

இந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் உள்பட பலரும் இது போன்ற புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் ரன்வீர் சிங் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் பார்த்து நடிகை தீபிகா படுகோன் இது தான் சொன்னதாக என்று தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட தகவலில், உண்மையில் ரன்வீர் சிங் ஈடுபட்ட இந்த போட்டோஷுட் கான்செப்ட் தீபிகாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. 

அந்தப் படங்கள் இணையத்தில் வருவதற்கு முன்பே தீபிகா அவற்றை பார்த்தார். தீபிகா எப்போதும் ரன்வீரை ஆதரித்ததால் தான் மிகப்பெரிய சாம்பியனாக இருந்து வருகிறார். 

எனவே ரன்வீர் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்ய வந்த போது, ​​தீபிகா படுகோன் கொஞ்சம் கூட தயங்கவில்லை என குறிப்பிட்டு இருந்தனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)