நான் எது செய்தாலும் என் கணவர் கண்டுக்க மாட்டார்... நடிகை ரஞ்சிதா !

0

கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திடுச்சு... எதுக்கு... என கேள்வி கேட்ட நாளிலிருந்து, இன்று வரை ரஞ்சிதாவின் பேரை பல்வேறு தளங்களில் கிசுகிசுக்கப் படுகிறது. 

நான் எது செய்தாலும் என் கணவர் கண்டுக்க மாட்டார்... நடிகை ரஞ்சிதா !
குறிப்பாக, கைலாச அதிபர் நித்யானந்தாவின் பெயர் வரும் போது, ரஞ்சிதா பெயரை பலர் தவிர்ப்பதில்லை. அதற்கு அவர்கள் பல காரணங்களை கூறுகின்றனர். 

ஆனால், அதையெல்லாம் கடந்து, தனது குருவாக நித்யானந்தாவை ரஞ்சிதா பூஜித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

ஒரு குடும்பத்தின் தலைவியாக இருக்கும் ரஞ்சிதா, எப்படி இத்தனை பிரச்சனைகளை எதிர் கொள்கிறார் என்பது குறித்து அவரே பேட்டியில் தெரிவித்துள்ளார். 

கபசுர குடிநீர் என்பது என்ன?கொரோனாவை குணப்படுத்துமா?

எனக்கு அப்படியே மாறுபட்டவர் என் கணவர். அதிகம் பேச மாட்டார். ரொம்ப பேலனஸ்ட்டா இருப்பார். நான் வாழ்க்கையில் பார்த்த ஒரே பேலன்ஸ்ட் மனிதர் அவர் தான். 

என்ன திட்டினாலும், அது நான் என்று மட்டுமல்ல, வெளியில், வேலையில் எந்த டென்ஷன் வந்தாலும், நான் கொடுத்த டென்ஷனா இருந்தாலும், வெளியில் தெரியவே தெரியாது. அதை அவர் வெளிகாட்டவே மாட்டார். 

நிறைய முறை அவரிடம் கேட்டுள்ளேன், இவ்வளவு நடந்துருக்கே... நீ எதுவும் ஃபீல் பண்ண மாட்டீயானு, அது நடந்துட்டு இருக்கும்... அதுக்கெல்லாம் நான் ஃபீல் பண்ணி உட்கார்ந்துட்டு இருக்க முடியுமா... என கூறுவார்.

ஆபிஸில் எது நடந்தாலும், அதை வீட்டில் வெளிப்படுத்த மாட்டார். நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன். ஆபிஸில் உள்ள பிரச்சனையை வீட்டில் காட்டுவார்கள், சண்டை போடுவார்கள். 

அது மாதிரி எந்த விசயத்தையும் என் கணவர் செய்ய மாட்டார். நான் ஏதாவது சோஷியல் ஃபார்ட்டி போனால், அங்கு யாராவது என்னிடம் சொல்லும் போது தான், அலுவலகத்தில் அவரக்கு பிரச்சனை நடந்ததே தெரியும். 

அவர் அந்த அளவிற்கு கூல். 16 வருடத்தில், அவர் கோபப்பட்டு நான் பார்த்தது இல்லை. மனரீதியாக அவர் மிக வலிமையானவர். அவரை பார்த்து நான் நிறைய இன்ஸ்ஃபயர் ஆகியிருக்கேன். 

நான் பல இடங்களில் உணர்ச்சிவசப் பட்டுள்ளேன். பாருங்க இப்படி பேசியிருக்காங்க... எப்படி அவங்க இப்படி பேசலாம் என கோபப்படுவேன். அவங்களால உனக்கு ஏதாவது நடக்கப்போகுதா? 

அவங்க வாழ்க்கையில் ஏதாவது முக்கியத்துவம் தரப்போறாங்களா? இல்லையே... விடு, யாரா இருந்தாலும், அதை கூலா எடுத்துக்கோ; அவங்க பேசுனது பிடிக்கலையா... விட்டுடு என, என்னை சமாதானப்படுத்தி விடுவார். 

அதை அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். நான் சின்ன சின்ன விசயங்களில் கூட டென்ஷன் ஆகிடுவேன். என்ன இப்படியெல்லாம் நடக்குது என ஆதங்கப் படுவேன். 

அதிகபட்சம் அரை மணி நேரம் தான் என் கோபம் இருக்கும். அதிகபட்சம் அது ஒரு மணி நேரம் நீடிக்கலாம். அதுக்கு மேல் நான் அதை மறந்து விடுவேன். அதுக்கு அப்புறம் புத்தகம் படித்து, மற்றதை மறந்து விடுவேன். 

விளையாட்டில் தோற்றதால் மனைவியின் முதுகெலும்பை உடைத்த கணவன் !

புத்தகம் படிப்பது எனக்கு மிகவும் பிடித்த விசயம். எந்த மனநிலையில் இருந்தாலும், புத்தக வாசிப்பு நம் மனநிலையை மாற்றி விடும். 

வீட்டில் ஏதாவது சண்டை போட்டிருந்தால் கூட, அதை இரண்டு நாள் கழித்து கேட்டால், எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. உங்களுக்கு எதுபிடிக்குதோ... அதை செய்யுங்கள்... 

அது உங்களை மாற்றும் என்று அந்த பேட்டியில் ரஞ்சிதா கூறியுள்ளார். குமுதம் இணையதளத்திற்கு நடிகை ரஞ்சிதா அளித்துள்ள அந்த பேட்டி, கடந்த 2021 ம் ஆண்டு வீடியோவாக வெளியானது. 

அந்த பேட்டி தற்போது, வைரலாக பகிரப்படுகிறது. நித்யானந்தாவின் உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், ரஞ்சிதாவின் இந்த பேட்டி, பல்வேறு கவனத்தை பெறுகிறது. 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings