டிவி விவாதம் குத்துச் சண்டை களமாக மாறிய நிகழ்ச்சி !

0

கட்டிப்புரண்ட அரசியல்வாதிகள் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது அதில் பங்கேற்ற விருந்தினர்கள் 2 பேர் அடிதடி சண்டை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

டிவி விவாதம் குத்துச் சண்டை களமாக மாறிய நிகழ்ச்சி !
பாகிஸ்தானில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அங்கு பொருளாதார பிரச்னைகள், அரசியல் குழப்பம் நடந்து வரும் சூழலில் எக்ஸ்ப்ரஸ் நியூஸ் டாக் ஷோ என்ற விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அப்னான் உல்லா கானும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியை சேர்ந்த ஷேர் அப்சல் மார்வத்தும் பங்கேற்றனர்.

விவாதம் சூடாக சென்று கொண்டிருந்த நிலையில் இந்த இருவரும் மற்றவரது கட்சியை சரமாரியாக தாக்கி பேசினர். முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கை சேர்ந்த அப்னான் சரமாரியாக விமர்சித்தார். 

ஒரு கட்டத்தில பொறுமை யிழந்த ஷேர் அப்சல் மார்வத், அப்னான் முகத்தில் குத்து விட்டார்.

(getCard) #type=(post) #title=(You might Like)

இதையடுத்து அவரும் பதிலுக்கு தாக்குதல் நடத்த, விவாத நிகழ்ச்சி குத்து சண்டை களமாக மாறியது. பின்னர் இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிடித்து தனிமைப் படுத்தினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் விவாதத்தை விட இந்த சண்டை நன்றாக இருக்கிறது. நான் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings