மாணவனை திருநங்கையாகவே மாற்றிய திருநங்கைகள்... கொடூரம் !

0

சென்னையில் உள்ள புரசைவாக்கம் பொன்னன் தெருவை சேர்ந்தவர் குளித்த தொழிலாளி தங்கராஜ். இவருடைய மனைவி சத்யா வீட்டு வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

மாணவனை திருநங்கையாகவே மாற்றிய திருநங்கைகள்... கொடூரம் !
இவருக்கு இரண்டு மகன் உள்ள நிலையில், இளைய மகன் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், சத்யா கடந்த 10ம் தேதி இளைய மகனை அதே பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் சிலர் அழைத்து சென்று திருநங்கையாக மாற்றி யுள்ளதாகவும், மகனை உடனடியாக மீட்டு தருமாறு ஓட்டேரி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மரணத்திற்கு பிறகு இயற்கை இரக்கம் காட்டப் போவதில்லை... படிங்க !

இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவனின் தாயார் சத்யா இன்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சம்பவம் தொடர்பாக மீண்டும் புகார் அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10ம் தேதி 5 திருநங்கைகள் சேர்ந்து கொண்டு எனது இளைய மகனை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, அவனுக்கு மூக்கு குத்தி திருநங்கையாக மாற்றியுள்ளனர். 

மகனை பார்ப்பதற்காகச் சென்ற போது அவனை பார்க்க விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தனர்.

என் மகன் திருநங்கையாக மாறியதால் அவனை வசூலுக்கு அழைத்து செல்லுவோம் என்றும் வேறு தொழில்களையும் செய்ய சொல்லுவோம் என்றும் அதை நீங்கள் கேட்க கூடாது என்றும் மிரட்டினர். 

இதையடுத்து நான் ஊர் மக்கள் உதவியுடன் திருநங்கை களிடமிருந்து தனது மகனை மீட்டு வந்தேன். 

ஆனாலும் நேற்று இரவு சுமார் பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வீட்டில் வந்து எங்களை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததுடன் தாக்குதல் நடத்தவும் முயன்றனர்.

அது மட்டுமல்லாமல், எனது மகனை திரும்ப அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை யென்றால் ஐந்து லட்சம் பணம் கொடுக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் உங்கள் வீட்டில் பிணம் தான் விழும் என்று மிரட்டி விட்டுச் சென்றனர். 

கேரளாவில் முதன் முதலில் நடத்தப்பட்ட நிர்வாண போட்டோஷூட் !
ஆகவே, காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட திருநங்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)