தீப்பற்றி எரிந்த மாணவன்.. தலைமையாசிரியர் காரணமா?

0

கோவையில், அரசு பள்ளி கட்டிடத்தில், கூடு கட்டியிருந்த தேனீக்களின் கூட்டை கலைக்குமாறு பள்ளியின் தலைமை ஆசிரியர், கையில் தீப்பந்தத்தை மாணவனிடம் கொடுத்து, 

தீப்பற்றி எரிந்த மாணவன்.. தலைமையாசிரியர் காரணமா?
கட்டளையிட்ட நிலையில், தேன்கூட்டைக் கலைக்க முயன்ற மாணவனின் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மாணவன் சிகிச்சை எடுத்து வருகிறான். கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

ஸ்டிக் எக்ஸர்சைஸ் சிம்பிளா செய்யலாம் வாங்க !

இந்தப் பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவன் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியின் கட்டிடத்தில் தேன்கூடு கட்டியிருந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த சந்துருவிடம் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, கையில் தீப்பந்தத்தை கொடுத்து தேன் கூட்டை கலைக்குமாறு கூறியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து கையில் தீப்பந்தத்துடன் சென்ற சிறுவன் தேன்கூட்டை கலைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக சந்துருவின் உடையில் தீ பற்றியது. 

இதில் சந்துருவின் அடிவயிறு மற்றும் பிறப்புறப்பு ஆகியவற்றில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து சிறுவன் கோவை அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

படுகாயம் அடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஆலந்துறை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ13 கோடிக்கு மீன் விற்பனை - என்ன மீன் தெரியுமா?
இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் மாணவ - மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய கட்டாயப் படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில், 

தற்போது மாணவனை தேன் கூட்டை கலைக்க கட்டளையிட்டு மாணவனுக்கு தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings