ஜெர்மனியில் துப்பாக்கியுடன் ஏர்போர்ட்டுக்குள் புகுந்த நபர் !

0

ஜெர்மனியில் விமான நிலையத்திற்குள் காருடன் புகுந்து 16 மணி நேரம் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர்.அந்த நபரின் 4-வயது மகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

ஜெர்மனியில் துப்பாக்கியுடன் ஏர்போர்ட்டுக்குள் புகுந்த நபர் !
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் தனது 4-வயது மகளை பிணைக் கைதியாக வைத்துக் கொண்டு 16 மணி நேரம் ஹம்பர்க் விமான நிலையத்தில் போக்கு காட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். 

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு : . 


ஜெர்மனி நாட்டின் ஹாம்பர்க் நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை நோக்கி அசுர வேகத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.


பாதுகாப்பு அதிகாரிகள் அல்ர்ட் ஆவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் விமான நிலையத்தின் பாதுகாப்பு நுழைவு வாயிலை காரால் இடித்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். 


இதனால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காருக்குள் இருந்தபடி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் தனது 4-வயது மகளுடன் காரை நேராக விமானத்திற்கு கீழே பார்க் செய்தார்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் உடனடியாக விமான நிலையத்தை சுற்றி வளைத்தனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு கருதி அனைத்து விமானங்களும் ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டது. 


இதனால் பயணிகளும் கடும் அவதி அடைந்தனர். விமான நிலையத்தில் பெரும் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. 


மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது மகளை அழைத்து கொண்டு விமான நிலையத்தில் புகுந்துள்ளதாக போலீசார் முதல் கட்ட விசாரணைக்கு பிறகு தெரிவித்தனர்.


விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதோடு, பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு இருப்பதால் பயணிகளிடையே பெரும் அச்சம் நிலவியது. 

ஜெர்மனியில் துப்பாக்கியுடன் ஏர்போர்ட்டுக்குள் புகுந்த நபர் !

தொடர்ந்து விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபருடன் பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. உளவியல் நிபுணர்களும் அந்த நபருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கிட்டதட்ட 16 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு தனது மகளை விட்டு விட்டு அந்த நபர் வெளியேறினார். 

ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்வது !

இதையடுத்து 4-வயது சிறுமியை பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பீதியை ஏற்படுத்திய நபரை கைது செய்தனர். 


இதனால், ஜெர்மனியில் 16 மணி நேரம் நீடித்த பெரும் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)