இந்த பள்ளியில் படிக்க வைக்க பெற்றோர்கள் போட்டி.. காரணம் என்ன? தெரியுமா?

0

தனியார் பள்ளிகளின் மீதான மோகம் பெற்றோர்கள் மத்தியில் எப்போதும் குறையாமல் உள்ளது. இதனால் அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோரும் அதிகமாக உள்ளது. 

இந்த பள்ளியில் படிக்க வைக்க பெற்றோர்கள் போட்டி.. காரணம் என்ன? தெரியுமா?
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக புதுச்சேரியில் ஒரு அரசு பள்ளி தரத்தை உயர்த்தி தனியார் பள்ளிகளுக்கே சாவல் விடும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. 

அந்த பள்ளி தான் புதுவை அருகே உள்ள கிருமாம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டது பள்ளி துணைமுதல்வர் கருணாகரன் என்கிறார்கள் பெற்றோர்கள். 

ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவதால் வரும் பிரச்சனைகள்?

அவர் தான் இதற்கான முழு முயற்சியும் எடுத்து வருவதாகவும் அவரின் முயற்சியால் தான் பள்ளியின் வளாகத்தை இவ்வளவு மேம்படுத்த முடிந்ததாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் இந்த பணியை எப்படி செய்தார் என்பதை விளக்கமாக நம்மிடம் பகிர்ந்தார். பள்ளி மேம்பாட்டில் முதல் கட்டமாக உள்கட்டமைப்பில் முழு கவனத்தையும் செலுத்தி, பள்ளி கட்டிடங்களை மராமத்து செய்து வண்ணம் தீட்டி பளிச்சென்று செய்துள்ளார். 

பள்ளிக்குள் நுழையும் போது, இடது பக்கத்தில் 50க்கும் மேற்பட்ட அறிவியல் கருவிகளை கொண்ட பிரமாண்டாமான அறிவியல்பூங்கா உள்ளது. 

அதில், சுழுலும் பெரிஸ்கோப், முள்துளை காமிரா, கியர் ரயில், மைய விலக்கு விசை, முப்பரிமான ஊசல், நியூட்டனின் வண்ணவட்டு உள்ளிட்ட இயற்பியல் கருவிகள், மற்றும் டி.என்.ஏ மாதிரி, வேதியல் தனிமை வரிசை அட்டவனை உள்ளிட்டவைகள் உள்ளது.

இங்கு மாணவர்கள் விளையாடிக் கொண்டே சுலபமாக அறிவியல் கோட்பாடுகளை கற்றுக் கொள்ளலாம்.

அதே போன்று வலது பக்கத்தில் சூரிய ஒளி நீர் சூடேற்றி உள்ளது. அதில் எப்பொழுது வேண்டும் என்றாலும் சுடுநீரை மாணவர்கள் பருகி கொள்ளலாம். அருகில் மீன் அருங்காட்சியகம், நீர்வீழ்ச்சி, மூலிகை பூங்கா உள்ளது. 

பள்ளியின் கிழக்கு பகுதி கட்டிடத்தில், புதுவையில் முதல் முறையாக 50 மாணவர்கள் ஒரே நேரத்தில் படிக்கும் இ-நுாலகமும் அதே போன்று முதல் முறையாக கணித பூங்காவும் அமைக்கப் பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல்100 செ.மீ அகல டி.வி திரை கொண்ட ஸ்மார்ட் வகுப்பறை, இயற்பியல், வேதியில், உயிரியல், கணிதம் என தனித்தனி ஆய்வு கூடம் என தனியார் பள்ளிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது. 

தோலில் இந்த மாதிரி மாற்றம் இருந்தால் கொரோனாவாக இருக்கலாம் !
இந்த அரசு பள்ளி.இதுகுறித்து கருணாகரன் கூறுகையில், ஆசிரியர்களின் கூட்டு முயற்ச்சியால் பள்ளியை மேம்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கினோம். 

மாணவர்களுக்கு ஷூ, ஐடி கார்டு படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது. 

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப் படுகிறது. அதிக மின்விசிறிகள் பொருத்தப்பட்டு பள்ளியின் செயல்பாடுகளில் முன்னேற்றம் காணப்பட்டதால் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உதவி செய்யத் தொடங்கினர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)