நகம் வெட்டியில் உள்ள இந்த கத்திகள் எதற்கு தெரியுமா?

0

பல் துலக்குதல், குளித்தல் மற்றும் நகங்களை வெட்டுதல் ஆகியவை நமது அன்றாட வாழ்வில் தினமும் செய்யக் கூடிய முக்கிய பணிகளாகும். அதே போல், நகங்களை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியம். 

நகம் வெட்டியில் உள்ள இந்த கத்திகள் எதற்கு தெரியுமா?
ஏனெனில், நகங்களின் மூலம் தான் கிருமிகள் நம் வாய் வழியாக நேரடியாக வயிற்றை சென்றடைகிறது. இதனால், பல்வேறு உபாதைகள் ஏற்படும். 

சில சமயங்களில் பல நோய்களுக்கும் வழிவகுக்கும். நெயில் கட்டரை நாம் நகங்களை வெட்ட மட்டும் தான் பயன்படுத்துவோம்.

ஆனால், நக வெட்டியில் இரண்டு கத்தி போன்ற ஆக்சஸரீஸ் இருக்கும். அது எதற்கு என்று நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால், அது கொடுக்கப் பட்டுள்ளதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. 

இது தெரிந்தால் கண்டிப்பாக நீங்க ஆச்சர்யப் படுவீர்கள். அதை எதற்கு எப்படி பயன்படுத்துவது என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

100 சதவீதம் நகங்களை வெட்டுவதற்கு மட்டுமே நெயில் கட்டர் பயன்படுத்தப் படுகிறது. இது தவிர மனிதனுக்கு எந்தப் பயனும் இல்லை. 

படுக்கையறையில் பெண்களை எரிச்சலூட்டும் பழக்கங்கள் !

இக்கட்டான சில சூழ்நிலைகளில் அதன் பயன்பாட்டை அதிகரிக்கத் தான் 2 வாள் போன்ற சாதனங்கள் இணைக்கப் பட்டுள்ளன. இதனால், நகங்களை வெட்டுவது மட்டுமின்றி வேறு பல பணிகளுக்கும் பயன்படுத்தலாம். 

நெயில் கட்டரில் இருக்கும் கூர்மையான வளைந்த கத்தி நகத்தில் இருக்கும் அழுக்கை சுத்தம் கொடுக்கப் பட்டுள்ளது என நம்மில் பலர் நினைத்திருப்போம்.

ஆனால், அது எதற்காக கொடுக்கப் பட்டுள்ளது தெரியுமா? அவை சிறிய பொருட்களை கையாள கொடுக்கப்பட்டது. அதுமட்டும் அல்ல, பாட்டில் மூடியைத் திறக்கவும் பயன்படுத்தலாம். 

உண்மையில், நெயில் கட்டரில் இரண்டு கத்திகளை சேர்த்த பிறகு, இதன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் உங்களுடன் அதை எடுத்துச் செல்லலாம். 

நகம் வெட்டியில் உள்ள இந்த கத்திகள் எதற்கு தெரியுமா?

ஏனென்றால் இது மிகவும் சிறியது மற்றும் பல நோக்கங்களுக் காகவும் பயன்படுத்தலாம். வெட்டுவது, துளையிடுவது, பாட்டிலை திறப்பது என விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். 

நீங்கள் ஒரு பயணத்தில் இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, இந்த சிறிய கத்தியால் எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது வேறு எதையும் எளிதாக வெட்ட முடியும். 

உங்களைப் பற்றி உங்கள் உதடுகள் என்ன சொல்கிறது?

மேலும், சிலர் இந்த கத்திகளின் கூர்மையான முனைகளை நக அழுக்குகளை சுத்தம் செய்ய பயன்படுத்து கின்றனர்.

இருப்பினும், அவ்வாறு செய்வது நல்லதல்ல, ஏனென்றால் சிறிய கவனச்சிதறல் இருந்தாலும், அதன் கூர்மையான விளிம்புகள் உங்கள் விரலைத் துளைத்து, உங்களை நீங்களே காயப்படுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)