தனுஷ் ஐஸ்வர்யா பிரிய காரணம் அந்த சம்பவம் தான் !

0

தனுஷ் ஐஸ்வர்யா பிரிய முக்கிய காரணமே ரஜினி வீட்டில் நடந்த சம்பவம் தான் என்று செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஒரே மாதிரி அறிக்கை வெளியிட்டு விட்டு பிரிந்தனர். 

தனுஷ் ஐஸ்வர்யா பிரிய காரணம் அந்த சம்பவம் தான் !
18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு பிரிந்தது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கவலையில் ஆழ்த்தியது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்து இரண்டு ஆண்டுக்கு மேலான நிலையில், இதுவரை ரஜினிகாந்த் மௌனமாகவே இருந்து வருகிறார். 

உணவுக்குழாய் புற்று நோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன?

ஆனால் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, இவர்கள் பிரிவதாக அறிக்கை வெளியிட்ட போதே, இவர்கள் பிரிவு நிரந்தரமானது அல்ல இவர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று கூறியிருந்தார்.


தனுஷூடனான பிரிவால் மனதளவில் பாதிக்கப் பட்டிருந்த ஐஸ்வர்யா தனது கவனத்தை சினிமா பக்கம் திருப்பி உள்ளார். தற்போது இவர் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். 


இதில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். 

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.


இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா பிரிந்ததற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


அதில், ஒரு முறை வீட்டு விஷேசத்திற்காக தனுஷின் பெற்றோர் ரஜினியின் வீட்டுக்கு சென்றிருந்த போது, அவர்கள் அவமானப் படுத்தப் பட்டதாக கூறப்படுகிறது. 


அந்த விஷயம் தனுஷுக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே பெரிய சண்டையே ஏற்பட்டுள்ளது.


தனுஷ் தனது குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர். ஒரு இடத்தில் தனது தாயோ, தந்தையோ கண்ணியமாக நடத்தப்படா விட்டால் கோபம் வரும். 

விளையாட்டு விபரீதமாகிறது.. சுடுடா அவனை.. காப்பாத்துடா என்னை.. !
இந்த விஷயம் தனுஷ் ஐஸ்வர்யாவுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தியது. 

மேலும் தனது தாய், தந்தையையா அவமானப் படுத்துகிறீர்கள் என்ற கோபத்தில் தான் போயஸ் கார்டனில் ஒரு மாளிகையையே தனுஷ் கட்டியிருக்கிறார் என்று அந்த பேட்டியில் பாலு தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)