நாகர்கோவிலில் வசித்து வந்த காசி என்ற இளைஞர் பள்ளி கல்லூரி பெண்களை ஏமாற்றி 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மேல் சீரழித்தார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருங்கிப் பழகி, அதையும் வீடியோ எடுத்தார். இதைக்காட்டி மிரட்டல் விடுத்து பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்தார்.
மாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா?
தரவில்லை எனில் சமூக வலை தளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டினார். இந்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காசிக்கு 4 மாடி வீடு, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உண்டு.
தொடர் புகாரின் பேரில் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 120 பெண்களை சீரழித்ததாக அவரே ஒப்புக் கொண்டார். 400 வீடியோக்கள், 1,900 ஆபாசப் படங்கள் அவரது லேப்டாப்பில் கைப்பற்றப்பட்டன.
எஸ்ஐ மகள் ஒருவரையும் தன் வலையில் வீழ்த்தியதாக சொன்னார்கள். ஒரு பிரபல நடிகரின் மகள் , அரசியல்வாதி மனைவி , விஐபிக்கள் வரிசை நீண்டது.
இவரது பாணியில் தற்போது கள்ளக்குறிச்சி அருண். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரூர் கிராமத்தில் வசித்து வருபவர் அருண் பிரசாத்.
இவர் கடந்த சில வருடங்களாகவே, இன்ஸ்டாகிராம் மூலமாக பெண்களை ஏமாற்றி அவர்களை தன் இச்சைக்கு உபயோகப் படுத்தியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
அந்த சமயத்தில் திருட்டுத் தனமாக அதனை போட்டோ, வீடியோ எடுத்து தேவைப்படும் போதெல்லாம் அந்த பெண்களிடம் பணமும் பறித்து வந்துள்ளார்.
பணம் கொடுக்கவில்லை என்றால், சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுவதாக சொல்லி மிரட்டல் விடுத்துள்ளார்.
வெயில் காலத்தில் மாம்பழம் ஏன் சாப்பிடணும் தெரியுமா?
இந்த புகாரின் அடிப்படையில் அருணின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்படவே இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கொந்தளித்து போய் விட்டார்கள்.
இப்போது அருண் அந்த ஏரியாவிலேயே இல்லையாம். எங்கே இருக்கிறார் எனவும் தெரியவில்லை. சென்னையில் எங்கோ பதுங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.
அவர் இன்னும் ஒன்றிரண்டு நாளில் வெளிநாடு போகப் போகிறாராம். அதனால், உடனே குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
.jpg)

Thanks for Your Comments